Weight loss: சூப்புடன் உடல் எடையை குறைக்கும் டிப்ஸ் உங்களுக்கு தெரியுமா?

Loose Weight With Soups: உடல் எடையை குறைப்பதும் ,தொந்தியைக் குறைப்பதும் அவ்வளவு ஒன்றும் கடினமான விஷயம் இல்லை.

தொந்தியை குறைக்க என்ன செய்தாலும் பயனளிக்கவில்லையா? சூப் டெக்னிக் முயற்சி செய்து பார்த்ததுண்டா?

மேலும் படிக்க | குச்சிக் குழங்க இப்படி சாப்பிட்டு பாருங்க! ஒல்லிக் குச்சி உடம்பு கேரண்டி 

1 /4

காய்கறி சூப் - நீங்கள் விரும்பும் எந்த காய்கறிகளையும் சேர்க்கலாம். இது மிகவும் சுவையான மற்றும் சத்தான சூப். காய்கறிகளை சுத்தமாக கழுவி சிறிய துண்டுகளாக நறுக்கி தண்ணீரில் கொதிக்க வைக்கவும். பிறகு தண்ணீருடன் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். அதனுடன் சிறிது உப்பு மற்றும் மிளகுத்தூள் சேர்த்து சூடாக குடிக்கவும்.

2 /4

சிக்கன் சூப் - குறைந்த கொழுப்புள்ள சிக்கன், உடல் எடையை குறைக்க உதவும். கோழி துண்டுகளை சிறிய துண்டுகளாக வெட்டி, சீரகம் மிளகு பச்சை மிளகாய் சேர்த்து தண்ணீரில் வேகவிடவும். வடிகட்டிய பின் சிறிது உப்பு, மிளகுத்தூள், பூண்டு சேர்த்து குடிக்கவும்.

3 /4

கேரட் சூப் - ஒரு கடாயில் சிறிது வெண்ணெயை சூடாக்கி, அதில் சிறிது வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து வதக்கவும். அதனுடன் பொடியாக நறுக்கிய கேரட் சேர்த்து தண்ணீர் விட்டு கொதிக்கவிடவும். நன்றாக வெந்ததும் மிக்சியில் அரைக்கவும். பின்னர் அதை மீண்டும் கடாயில் மாற்றி, உப்பு, மிளகு சேர்த்து கொதிக்கவிடவும். பிறகு எலுமிச்சை சாறு சேர்த்தால் கேரட் சூப் ரெடி.

4 /4

பூசணி சூப் - பழுத்த பூசணிக்காயில் சூப் செய்வது சிறந்தது. தோலை அகற்றிவிட்டு பெரிய துண்டுகளாக வெட்டவும். பிறகு ஒரு பாத்திரத்தில் சிறிது வெண்ணெயுடன் இஞ்சி மற்றும் பூண்டு சேர்த்து வதக்கவும். இதனுடன் பூசணிக்காயைச் சேர்த்து சமைக்கவும். பிறகு தண்ணீர் அல்லது சிக்கன் ஸ்டாக் சேர்க்கவும். ஒரு மென்மையான பேஸ்ட் உருவாகும் வரை கலக்கவும். அதில் உப்பு, மிளகு மற்றும் வெண்ணெய் சேர்த்து ஆரோக்கியமான சூப்பை குடிக்கவும்