பூமியின் இதயம் இயற்கை: இயற்கையை நேசிப்போம்! அதன் வளங்களை மீட்போம்!!

பணம் தேடி ஓடும் நாம் சற்று நின்று யோசித்துப்பார்த்தால், பணத்தை உண்ண முடியாது, ஆடம்பரங்களை பருக முடியாது, அதிகாரத்தை சுவாசிக்க முடியாது என்பது புரியும். நாம் உண்ண, பருக, சுவாசிக்க இயற்கைதான் தேவை, இயற்கை மட்டும் தான் தேவை. அதை பராமரிப்பதில் கவனம் செலுத்தாமல் நாம் எங்கு ஓடுகிறோம்? சிந்தித்து செயல்படுவோம்!!

1 /5

வற்றாத ஜீவ நதிகளும் வற்றிப்போகும், மனிதா நீ உணராமல் போனால் தங்கம் இருக்கும், குடிக்க தண்ணீர் இருக்காது, மனிதா நீ திருந்தாமல் போனால். நீர் வளம் காப்போம்!!

2 /5

ஒரு வேளை உணவிற்கு வழி இல்லாமல் பலர் ஏங்கி நிற்கும் வேளையில், பல வேளை உணவு குப்பைத்தொட்டியில் தேங்கி நிற்கும் அவலம் ஏன்? இருப்பதை பகிர்ந்துண்போம், உணவை வீணாக்காமல் இல்லாதவருக்கு அளிப்போம்!!

3 /5

காசு பக்கம் போன கால்கள் இனி காடு பக்கம் போகட்டும்! பணம் சேர்த்தது போதும் மனிதா, இனி கொஞ்சம் வனம் வளர்ப்போம் வா!!

4 /5

ஓய்வில்லாமல் ஒளி தரும், குறைவில்லாமல் குளிர்ச்சி தரும், தான் சுற்றி நமக்கு காற்று தரும், மின்சாரத்திற்கு நாம் என்ன தரலாம்? அதில் சிக்கனம் காத்தால் போதும், பல நன்மைகள் பெறலாம்!!

5 /5

விலங்குகளை தோலாகவும், தந்தமாகவும் இறைச்சியாகவும் மட்டும் பார்க்காதே மனிதா! உயிராகவும் உடலாகவும் உன்னைப் போல் ஒரு ஜீவனாகவும் பார்!! இருந்தாலும் இறந்தாலும் அவை உனக்கு அளித்துக்கொண்டே இருக்கின்றன! நீ அவற்றை அழித்துக் கொண்டே இருக்கிறாய், சிந்தித்துப் பார்!!