சீக்கிய மத நம்பிக்கைப்படி குரு கிரந்த சாகிப் என்ற நூலே கடவுளை அடையும் வழியாகும். உருவ வழிபாடு கிடையாது. சீக்கிய மதத்தின் குருமார்களை போற்றித் துதிக்கும் வழக்கம் உண்டு.
குருத்வாரா என்பதன் பொருள் குருவை அடைவதற்கான வழி என்பதாகும். அனைத்து சமயத்தவர்களும் குருத்துவாராவுக்கு சென்று வழிபடலாம், எந்தவிதக் கட்டுப்பாடுகளும் கிடையாது. குருத்துவாரில் தர்பார் சாகிப் எனும் சிறு மேடையில் குரு கிரந்த் சாகிப் என்ற சீக்கிய மத நூல் வைக்கப்படும். சீக்கிய மதத்தினரின் நம்பிக்கைப்படி குரு கிரந்த சாகிப் என்ற நூலே கடவுளை அடையும் வழியாகும். சீக்கிய மதத்தில் உருவ வழிபாடு கிடையாது, சீக்கிய மதத்தில் குருமார்களை போற்றித் துதிக்கும் வழக்கம் உண்டு.
குருத்வாரா என்றாலே முதலில் நினைவுக்கு வரும் பொற்கோவில் தான். இதோ பொற்கோவில் உங்களுக்காக...
இந்தியா சுதந்திரம் அடைந்தபோது பாகிஸ்தான் தனி நாடாக உருவானது. அப்போது பாகிஸ்தானில் பல குருத்வாராக்கள் இருந்தன. அதில் முக்கியமான ஒன்று கர்தார்பூர் குருத்வாரா ஆகும்.
மக்களுக்கு சேவை செய்வது சீக்கியர்கள் அனைவருக்கும் கட்டாயம் ஆகும். யார் எந்த பதவியில் இருந்தாலும் சரி, சீக்கியர்கள் அனைவரும் குருத்வாராவுக்கு செல்லும் போது சேவை செய்வார்கள். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தற்போது கூட குருத்வாராவுக்கு சென்று சேவை செய்கிறார்...
குருத்துவாராவுக்குள் செல்லும் போது தலையை மூடியவாறு செல்வது கட்டாயம் ஆகும்.
குருத்துவாரில் அன்னதானம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. அன்னதானம் என்பதற்கு லங்கர் (Langar) சீக்கியர்கள் கூறுவார்கள்.
சீக்கிய குருமார்கள் இயற்றிய பக்திப் பாடல்களை பாடி குருத்வாராக்களில் வழிபாடு நடைபெறும்.