Latest News Vanitha Vijaykumar : சின்னத்திரையில் பிரபலமாக வலம் வரும் வனிதா விஜயகுமார், தற்போது ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். இது, இணையத்தில் வைரலாகி வருகிறது.
Latest News Vanitha Vijaykumar : 20 ஆண்டுகளுக்கு முன்னர், ஹீரோயினாக வலம் வந்த வனிதா விஜயகுமார், இப்போது சின்னத்திரையில் கலக்கி வருகிறார். சர்ச்சைகளுக்கு பெயர்போன இவர், இதுவரை இரண்டுக்கும் மேற்பட்ட திருமணங்கள் செய்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், இவர் பிக்பாஸ் பிரபலம் ஒருவருடன் இணைந்து ஒரு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். இது இணையத்தில் வைரலாகி வருகிறது.
பிரபல நடிகர் விஜயகுமாரின் மகள் வனிதா, திரையுலகிற்கு வந்த புதிதில் சில படங்களில் நாயகியாக நடித்தார். இந்த படங்கள் பெரிதாக வெற்றிபெறவில்லை என்றாலும் ஓரளவிற்கு பிரபலமானவராக இருந்தார்.
வனிதா விஜயகுமார், கடந்த சில ஆண்டுகளாக சர்ச்சைக்கு பெயர் போன நாயகியாக இருக்கிறார். இதனால், இவரது குடும்பத்தினரே இவரிடம் பேசுவதில்லை என்று கூறப்படுகிறது.
வனிதா, முதலில் ஆகாஷ் என்பவரை திருமணம் செய்தார். 7 ஆண்டுகள் நீடித்த இந்த திருமணம், விவாகரத்தில் முடிந்தது. இதையடுத்து, 2007 முதல் 2012 ஆம் ஆண்டு வரை ராஜன் ஆனந்த் என்பவருடன் திருமண உறவில் இருந்தார்.
2020ஆம் ஆண்டில் பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்த வனிதா, அந்த ஆண்டிலேயே அவரை விட்டு பிரிந்தார். இது பெரும் சர்ச்சையாக மாறியது. இதையடுத்து, பீட்டர் பால் கடந்த ஆண்டு உயிரிழந்தார்.
வனிதாவின் மூத்த மகள் ஜோவிகா, பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசனில் கலந்து கொண்டு கவனம் ஈர்த்தார். வனிதாவும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3வது சீசனில் கலந்து கொண்டார்.
வனிதா, தற்போது 4வது முறையாக திருமணம் செய்ய இருப்பதாக தகவல்கள் பரவி வருகிறது.
இதற்கு காரணம் அவர் சமீபத்தில் வெளியிட்ட ஒரு பதிவுதான்.
வனிதாவை போல, பிக்பாஸ் மூலம் பிரபலம் ஆனவர் நடன இயக்குநர் ராபர்ட் மாஸ்டர். இவர், பிக்பாஸ் 6வது சீசனில் கலந்து கொண்டார். இருவரும் கடற்கரையில் இருப்பது போலவும், Save The Date என்று அக்டோபர் 5ஆம் தேதியையும் குறிப்பிட்டிருக்கிறார் வனிதா. இது, படத்தின் ப்ரமோஷனாக இருக்கலாம் என கூறப்படுகிறது.