கோடை விடுமுறையை கழிக்க டெல்லி சென்று சில அழகான இடங்களை சுற்றி பார்க்கலாம்.
ஹுமாயூனின் கல்லறைக்கு அருகில் அமைந்துள்ள 'லோதி கார்டன்ஸ்', பசுமையான மரங்கள் மற்றும் கண்ணை கவரும் மலர்களால் நிரம்பியுள்ள அழகிய தோட்டமாகும். இது ஒரு வரலாற்று தோட்டம் மற்றும் கோடை காலத்தில் டெல்லியில் சுற்றி பார்க்க வேண்டிய முக்கிய இடங்களில் இதுவும் ஒன்றாகும்.
கைவினைப்பொருட்கள் மீது ஆர்வம் கொண்டவர்கள் கண்டிப்பாக போக வேண்டிய இடம் 'டில்லி ஹாட்'. இந்த பகுதியில் நாம் அணியக்கூடிய வகையிலான புடவைகள், சால்வைகள், காலணிகள், ஆடைகள் மற்றும் அணிகலன்கள் போன்ற கையால் செய்யப்பட்ட அழகிய பொருட்கள் உள்ளன.
'இந்தியா கேட்' என்பது முதல் உலகப் போரில் உயிரிழந்த 70,000 இந்திய வீரர்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட 42 மீட்டர் உயரமுள்ள நினைவுச்சின்னமாகும். இந்தியா கேட் இரவு நேரத்தில், நீரூற்றுகளால் சூழப்பட்டிருக்கும் போது, பார்ப்பதற்கு அது ஒரு அற்புதமான கண்ணைக்கவரும் காட்சியாக இருக்கும்.
மாடர்ன் ஆர்ட் பிரியர்கள் கண்டிப்பாக டெல்லியில் சுற்றி பார்க்க வேண்டியது 'நேஷனல் கேலரி ஆஃப் மாடர்ன் ஆர்ட்'. உலகத்தில் பல சிறப்பான படைப்புகள் இங்கு வைக்கப்பட்டுள்ளது.
பல இடங்களிலும் உள்ள சுற்றுலா பயணிகள் டெல்லியில் அதிகம் செல்லும் இடம் 'அக்ஷர்தாம் கோயில்'. உங்கள் ஆன்மாவை நிரப்பவும், மனதை ஒருநிலைப்படுத்தவும் இந்த பழமையான கோயிலுக்கு செல்லலாம்.