தொப்பை கொழுப்பை கரைக்கும் ‘சில’ யோகாசனங்கள்!

இன்றையை வாழ்க்கை முறை மற்றும் பிஸியான அலுவலக வாழ்க்கை காரணமாக,  உடல் பருமன், தொப்பை கொழுப்பு போன்ற பிரச்சனைகளை பெரும்பாலானோர்  சந்திக்கின்றனர். எடை அதிகரித்தவுடன், அதைக் குறைப்பது மிகவும் கடினமானதாக ஆகிவிடுகிறது. 

உடல் பருமன் காரணமாக, இரத்த சர்க்கரை, இதய ஆரோக்கியம் போன்ற நோய்களின் ஆபத்து அதிகரிக்கிறது. எனவே, உடல் பருமனை குறைப்பது மிக அவசியம்.

1 /7

நீங்கள் உடல் பருமன் மற்றும் தொப்பை கொழுப்பால்  அவதிப்பட்டு வந்தால், அதை எளிதாகக் குறைக்க சில யோகாசனங்களை தினமும் செய்வது சிறந்த பலன்களை கொடுக்கும். உடல் எடையை குறைக்க,  வீட்டிலேயே செய்யக் கூடிய சில யோகாசன பயிற்சிகளைப் பற்றி அறிந்து கொள்வோம்.

2 /7

உடல் எடையை குறைக்க உட்கடசனா  யோகாசன பயிற்சி மிகவும் நல்லது. இது நாற்காலி போஸ் என்றும் அழைக்கப்படுகிறது. இதனால் கால் தசைகள் வலுவடையும். இது உடல் சமநிலைக்கும் நல்லது. இதைச் செய்ய, கால்களை சிறிது மடக்கி, நாற்காலி நிலையில் நிற்க வேண்டும். உட்கடாசனம் செய்வதன் மூலம், தொப்பை மற்றும் தொடையைச் சுற்றியுள்ள கொழுப்பைக் குறைக்கலாம்.

3 /7

தொப்பையை வேகமாக குறைக்க வேண்டுமானால் தனுராசனம் செய்ய வேண்டும். தனுராசனம் செய்வதன் மூலம் உடல் கொழுப்பை கரைக்கலாம். இதைச் செய்ய, தரையில் உங்கள் குப்புற படுத்துக் கொள்ளுங்கள். மேலே உள்ள படத்தில் கட்டிய படி கைகளையும் கால்களையும் ஒன்றாக சேர்த்து இணைத்து உடலை வில்லாக வளைக்கவும்.  

4 /7

திரிகோணாசனம் செய்வது உடல் எடையை குறைக்க மிகவும் சிறந்தது. இந்த ஆசனத்தில் இரண்டு கால்களிலும் சம எடை கொடுத்து நின்று கொண்டு, பின் வலது கையால் இடது காலை ஒரு முறையும், இடது கையால் வலது காலை தொட வேண்டும்.  அதே போன்று வலது கையினால் இடது காலை தொட வேண்டும். புகைப்படத்தில் காட்டப்பட்டுள்ளபடி இந்த பயிற்சியை நீங்கள் செய்யலாம்.

5 /7

புஜங்காசனம் கோப்ரா போஸ் என்றும் அழைக்கப்படுகிறது. இதில் குப்புற தரையில் படுத்த பின் தலையை பாம்பை போல் முன்னோக்கி உயர்த்த வேண்டும். உடல் எடையை குறைக்கவும், தொப்பையை குறைக்கவும் இது ஒரு நல்ல பயிற்சி.

6 /7

கும்பகாசனம் பிளாங்க் போஸ் என்றும் அழைக்கப்படுகிறது. இவ்வாறு செய்வது உடல் எடையை குறைக்க மிகவும் நல்லது. தொப்பையை குறைக்க கும்பகாசனம் செய்ய தரையில் படுத்து, உங்கள் கைகள் மற்றும் கால்களை சிறிது உயர்த்தவும்.

7 /7

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.