அமேசான் - பிளிப்கார்டில் OnePlus 12R 5G போனை தள்ளுபடி விலையில் வாங்கலாம்...!

OnePlus 12R 5G  Offer: 16ஜிபி ரேம், 5500எம்ஏஎச் பேட்டரி மற்றும் 50எம்பி கேமராவுடன் OnePlus 12R 5G போனை தள்ளுபடி விலையில் வாங்கலாம்.

ஆப்பிள் போனிற்கு அடுத்தபடியாக, மிக அதிக அளவில் விற்பனையாகும், OnePlus ஸ்மார்ட்போனை மலிவான விலையில் வாங்க வாய்ப்பு உள்ளது.

1 /8

OnePlus 12R ஸ்மார்ட்போனில் 6.78 இன்ச் LTPO ProXDR டிஸ்ப்ளே உள்ளது. இதன் உச்ச பிரகாசம் 450நிட்ஸ், புதுப்பிப்பு வீதம் 120 ஹெர்ட்ஸ் மற்றும் பிக்சல் தெளிவுத்திறன் 2780 x 1264, டச் ஸ்வைபிங் 1000 ஹெர்ட்ஸ் மற்றும் ஸ்க்ரீன் டுபாடி ரெசல்யூஷன் 94.2 சதவீதம்.

2 /8

OnePlus 12R ஸ்மார்ட்போனின் மூன்று வகைகள் உள்ளன. இதன் அடிப்படை மாடல் 8ஜிபி ரேம் உடன் 128ஜிபி உள் சேமிப்புடன் வருகிறது. போனின் டாப் வேரியண்ட் 16ஜிபி ரேம் உடன் 256ஜிபி சேமிப்பகத்தைக் கொண்டுள்ளது.

3 /8

OnePlus 12R 5G ஸ்மார்ட்போன் 5,500 mAh பேட்டரியுடன் வருகிறது. இது 100W SUPERVOOC சார்ஜிங் வேகத்தை ஆதரிக்கிறது.

4 /8

OnePlus 12R 5G ஸ்மார்ட்போனில் Snapdragon 8 Gen 2 செயலி பொருத்தப்பட்டுள்ளது. இது இரட்டை Dual Cryo-velocity VC கூலிங் அமைப்பைக் கொண்டுள்ளது. இந்த போன் ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான OxygenOS 14.0 OS இல் இயங்குகிறது.

5 /8

புகைப்படம் எடுப்பதற்காக, போனின் பின்புறத்தில் மூன்று பின்புற கேமரா அமைப்பு வழங்கப்பட்டுள்ளது. இதில் 50MP Sony IMX890 பிரதான கேமரா, 8MP அல்ட்ரா வைட் ஆங்கிள் சென்சார் மற்றும் 2MP மேக்ரோ லென்ஸ் ஆகியவை உள்ளது.

6 /8

செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்பிற்காக போனின் முன்பக்கத்தில் 16எம்பி முன்பக்க கேமரா வழங்கப்பட்டுள்ளது. ஃபேஸ் அன்லாக் போன்ற அம்சங்கள் போனில் உள்ளன. Corning Gorilla Glass Victus 2  மற்றும் HDR10+ ஆகியவற்றை ஆதரிக்கிறது.

7 /8

OnePlus 12R 5G ஸ்மார்ட்போனின் விலை ரூ.39,999 முதல் தொடங்குகிறது. போனின் இரண்டாவது வேரியண்டின் விலை ரூ.42,999. போனின் டாப் வேரியண்ட் ரூ.45,999.

8 /8

தற்போது இந்த ஸ்மார்ட்போனில் ரூ.2000 தள்ளுபடி கிடைக்கிறது. இருப்பினும், இந்த ஆஃபர் ஐசிஐசிஐ மற்றும் ஹெச்டிஎஃப்சி வங்கி கார்டுகளில் மட்டுமே. அமேசான் மற்றும் அதிகாரப்பூர்வ இணையதளம் இரண்டிலும் சலுகைகள் உள்ளன.