நரம்பு மண்டலத்தை பாதிக்கும் காபி - டீ பழக்கம்... எச்சரிக்கும் ICMR..!!

ஆரோக்கியமான உணவு பழக்கவழக்கங்களை கடைபிடிக்க மக்களை ஊக்குவிக்கும் வகையில் தேசிய ஊட்டச்சத்து மையத்துடன் இணைந்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் உணவுமுறை வழிகாட்டல்களை அவ்வப்போது வெளியிடும்.

ICMR என்னும்  இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்  வழங்கும் வழிகாட்டுதல்கள் பல வகை உணவு மற்றும் வழக்கங்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகின்றன.

1 /8

டீ - காபி இரண்டு பானங்களுமே இந்தியர்கள் வாழ்க்கையில் முக்கிய இடம் பிடித்தவை.  முக்கியமாக காலையில் ஸ்ட்ராங்  காபி அல்லது டீ குடித்தால் தான் அன்றைய நாளை புத்துணர்ச்சியுடன் தொடங்க முடியும்.

2 /8

உங்கள் வாழ்விலும் டீ காபி பிரிக்க முடியாத அங்கம் என்றால், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) டீ - காபி தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையை நிச்சயம் படிக்க வேண்டும்.

3 /8

காபி- தேநீ்ர் இரண்டிலுமே கஃபைன் என்ற பொருள் உள்ளது.  ஒரு கப் காபியில் 80 முதல் 120 மி.கிராம், தேநீரில் 30 முதல் 65 மி.கிராம் கஃபைன் உள்ளது. 

4 /8

நாள் ஒன்றுக்கு நமது உடலில் செல்லும் கஃபைன் அளவு 300 மில்லி கிராம் அளவுக்கு மிகாமல் இருந்தால் பாதிப்பு இருக்காது. ஆனால், அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு.

5 /8

காபி டீ அதிக அளவில் குடித்தால் ஆரோக்கியத்திற்கு பல தீங்குகளை ஏற்படுத்தும். அளவிற்கு அதிக டீ அல்லது காபி நரம்பு மண்டலத்தை பாதிக்கும்.

6 /8

சாப்பாட்டுக்கு முன்போ அல்லது சாப்பிட்ட பின்னரோ டீ அல்லது காபி குடித்தால், உணவில் உள்ள இரும்பு சத்து உடலில் உறிஞ்சப்படாது.  இது இரும்புசத்து குறைபாடு, ரத்தச் சோகை ஆகியவற்றை ஏற்படுத்தும்.

7 /8

சாப்பாட்டுக்கு முன்போ அல்லது சாப்பிட்ட பின்னரோ டீ அல்லது காபி குடித்தால், அது உயர் ரத்த அழுத்தத்தை உண்டாக்குவதோடு இதய நோய் அபாயத்தையும் அதிகரிக்கும்.  

8 /8

சாப்பிட்ட பின் அல்லது முன் காபி அல்லது டீ, இரும்பு சத்து குறைபட்டை மட்டுமல்ல வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் ஆகிய சத்துக்களையும் உடல் உறிஞ்சுவதையும் தடுக்கிறது. இதனால் உடலில் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படும்.