ஆர்வ கோளாறுல அதிகமா கிரீன் டீ குடிக்காதீங்க... எச்சரிக்கும் மருத்துவர்கள்

Side effects of Green Tea: ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் மற்றும் பாலிபினாக்கள் நிறைந்த கிரீன் டீ, உடன் ஆரோக்கியத்திற்கு பெரிதும் நன்மை பயக்கும் என்பதில் மாற்றுக் கருத்து ஏதும் இருக்க முடியாது. ஆனால் அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

 

தினமும் கிரீன் டீ குடிப்பது மிக நல்ல வழக்கம் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் ஆர்வக்கோளாறில் அதிகமாக குடிப்பது சில பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

 

1 /8

Side effects of Green Tea: தற்போது ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு மக்கள் மத்தியில் அதிகரித்து வரும் நிலையில், பலர் காபி டீக்கு பதிலாக கிரீன் டீ எடுத்துக் கொள்வதை வழக்கமாக்கி கொண்டுள்ளனர். கிரீட்டில் ஆயுர்வேத குணங்கள் நிறைந்திருப்பதன் காரணமாக, இது சிறந்த ஆரோக்கியமான பானமாக கருதப்படுகிறது.  

2 /8

உடல் பருமனை குறைக்க நினைப்பவர்களுக்கு கிரீன் டீ சிறந்த தீர்வாக உள்ளது. ஏனெனில் இதில் உள்ள பாலிசி நூல்கள் வளர்ச்சி மாற்றத்தை அதிகரிப்பதோடு, மிகக் குறைந்த கலோரிகள் கொண்டது. எனவே, தொப்பையை குறைக்கும் சிறந்த பானமாக கருதப்படுகிறது.  

3 /8

கிரீன் டீயின் பக்க விளைவுகள் குறித்து எச்சரிக்கும் உணவுகள் நிபுணர்கள், நாளொன்றுக்கு இரண்டு கப் கிரீன் டீக்கு மேல் அதிகம் அருந்துவதால், உடல்நல பாதிப்புகள் வரும் என்று எச்சரிக்கின்றனர்.  

4 /8

செரிமான பிரச்சனை: நாளொன்றுக்கு இரண்டு கப் என்று அளவிற்கு அதிகமாக கிரீன் டீ எடுத்துக் கொள்வது, செரிமான பிரச்சனைகளை உண்டாக்கி, அஜீரணம், வாயு தொல்லை போன்ற பிரச்சனைகளை உண்டாக்கலாம். சில சமயங்களில் மலச்சிக்கல், நெஞ்செரிச்சல் போன்று பக்க விளைவுகளும் உண்டாகலாம்.  

5 /8

உடல் பலவீனம்: அளவிற்கு அதிகமான கிரீன் டீ குடிப்பதால், சில சமயங்களில் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் குறைபாடு உண்டாக்கலாம். ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக அதிக அளவிலான சோர்வு மற்றும் பலவீனம் ஏற்படும். எனவே எச்சரிக்கையாக இருப்பது அவசியம்.  

6 /8

சரும ஆரோக்கியம்: அளவிற்கு அதிகமான கிரீன் டீ சரும ஆரோக்கியத்தை பெரிதும் பாதிக்கும். இதனால் சருமத்தில் அரிப்பு, அலர்ஜி போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம் என்று உணவியல் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.  

7 /8

தினமும் 2 கப் கிரீன் டீக்கு மேல் குடித்தால், தூக்கமின்மை பிரச்சனை ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்திற்கு 7 முதல் 8 மணி நேரம் ஆழ்ந்த தூக்கம் அவசியம் என்ற நிலையில், தூக்கமின்மை பல வகைகளில் பாதிப்பை ஏற்படுத்தும்.

8 /8

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.