Aadhaar-PAN கார்டில் உள்ள பெயரில் வித்தியாசம் உள்ளதா.. சரி செய்வது எப்படி..!!!

சிலருக்கு ஆதார் அட்டை மற்றும் பான் கார்டில் பெயர் ஒரே மாதிரியாக இல்லாமல் வேறு விதமாக பதிவாகி இருக்கும். பெயர் வேறாக இருக்கும்.  எழுத்துப்பிழை காரணமாக சிறிதளவு வித்தியாசம் இருந்தால் கூட பல முக்கியமான பணிகளில் இது தடையாக மாறி  சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது

சிலருக்கு ஆதார் அட்டை மற்றும் பான் கார்டில் பெயர் ஒரே மாதிரியாக இல்லாமல் வேறு விதமாக பதிவாகி இருக்கும். பெயர் வேறாக இருக்கும்.  எழுத்துப்பிழை காரணமாக சிறிதளவு வித்தியாசம் இருந்தால் கூட பல முக்கியமான பணிகளில் இது தடையாக மாறி  சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது

1 /5

இப்போதெல்லாம், ஒவ்வொரு வேலைக்கும் ஆதார் அட்டை ( Aadhaar card) மற்றும் பான் கார்டு (PAN card) தேவை. எரிவாயு முன்பதிவு முதல் வங்கியில் கணக்கு திறப்பது வரை இந்த இரண்டு ஆவணங்களும் கோரப்படுகின்றன. குழந்தையை பள்ளியில் சேர்ப்பது அல்லது எந்தவொரு அரசாங்கத் திட்டத்தையும் பயன்படுத்திக் கொள்வது,  ஆகியவற்றுக்கு ஆதார் என்பது மிக முக்கியமான ஆவணம். ஆதார் மற்றும் பான் கார்டு இணைக்கப்பட்டிருந்தால், வேலை இன்னும் எளிதாகிறது.

2 /5

ஆதார் அட்டை மற்றும் பான் கார்டில் பெயர்களில் வித்தியாசம் இருக்கலாம். எழுத்துப்பிழை காரணமாக சிறிதளவு வித்தியாசம் இருந்தால், பல விஷயங்களில் சிக்கல் ஏற்படும். உங்களுக்கும் இதுபோன்ற நிலை இருந்தால், இந்த சிக்கலை எவ்வாறு சரிசெய்வது என்று புரியவில்லை என்றால், ஆதார் மற்றும் பான் கார்டில் உள்ள பெயரை ஒரே விதமாக இருக்கும் வகையில், ஆதார் அட்டைக்கு ஏற்ப பான் அட்டையையோ அல்லது பான் அட்டைக்கு ஏற்ப ஆதாரிலோ திருத்தம் செய்யலாம். அதனை சரிசெய்யக்கூடிய எளிய வழியை அறிந்து கொள்ளலாம்

3 /5

முதலில், நீங்கள் National Securities Depository Limited அதாவது  NSDL வலைத்தளமான, https://www.onlineservices.nsdl.com என்ற வலைதளத்திற்கு சென்று, தற்போதுள்ள பான் அட்டையில் திருத்தம் என்பதற்கான ''Correction in Existing PAN' என்பதை இங்கே தேர்ந்தெடுக்கவும். அதில் கோரியுள்ள தகவலை நிரப்பவும், பின்னர் ஆவணத்தை சரியான பெயரை எழுதி, பின்னர் சமர்ப்பிக்கவும். இந்த திருத்தத்திற்கு பெயரளவில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சரியான பெயருடன் கூடிய பான் அட்டை 45 நாட்களுக்குள் உங்கள் பதிவு செய்யப்பட்ட முகவரிக்கு அனுப்பப்படும்.  

4 /5

இப்போது நீங்கள் ஆதார் அட்டையில் பெயரை திருத்த வேண்டும் என்றால், நீங்கள் ஆதார் சேர்க்கை மையத்திற்கு செல்ல வேண்டும். ஒரு படிவத்தை நிரப்ப வேண்டும், அதில் நீங்கள் செய்ய வேண்டிய திருத்தத்தையும் நிரப்ப வேண்டும். இந்த படிவத்தில் சரியான பெயருடன் உள்ள ஒரு ஆவணத்தை இணைத்து சமர்ப்பிக்கவும். இதற்காக, ரூ .25-30 என்ற பெயரளவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த செயல்முறையின் மூலம், உங்கள் பெயரில் நீங்கள் விரும்பிய திருத்தம் செய்யப்படுகிறது.

5 /5

ஆதார்- பான் அட்டையில் பெயர்கள் ஒரே மாதிரி இருப்பது அவசியம். எனவே இன்றே அதை திருத்த நடவடிக்கை எடுக்கவும்.