மிகவும் easy-யாக 184 கோடி சம்பாதிக்கும் 8 வயது சிறுவன்: அப்படி என்ன செய்கிறான்?

You Tube-ல் வீடியோக்களை அப்லோட் செய்து அதில் அதிக அளவு லாபம் ஈட்டும் பல நபர்கள் இருக்கிறார்கள். ஆனால், இதில் அதிகபட்சமாக பணம் ஈட்டும் நபர்களில் ஹாலிவுட் நடிகர்கள் போன்ற நபர்கள்தான் இருப்பார்கள் என நீங்கள் நினைத்தால் அது தவறு. சராசரி மனிதர்களும் இந்த வீடியோக்கள் மூலம் அதிக பணம் ஈட்டுகிறார்கள்.

பணம் சம்பாதிக்க வயது ஒரு தடை இல்லை. யூடியூப்பில் தங்கள் வீடியோக்களை பதிவேற்றி கோடிக்கணக்கில் பணம் ஈட்டும் பலர் உள்ளனர்.  இப்படி You Tube வீடியோக்கள் மூலம் அதிக அளவு வருமானம் பெறும் நபர்களைப் பற்றி இங்கே காணலாம். இந்த பட்டியலில் யாருடைய பெயர் முதலிடத்தில் உள்ளதோ அவரது வயது 8!! 

1 /4

ரெட் மற்றும் லிங்க் அற்புதமான நகைச்சுவை நடிகர்கள். தங்கள் வேடிக்கையான வீடியோக்களால் மக்களை சிரிக்க வைப்பதில் நிபுணத்துவம் பெற்ற இந்த ஜோடி, You Tube மூலம் அதிக அளவில் பணம் ஈட்டுகிறார்கள். You Tube மூலம் இவர்கள் பெறும் ஆண்டு வருவாய் சுமார் 17.5 மில்லியனாகும் (சுமார் ரூ. 129 கோடி).

2 /4

ரஷ்ய-அமெரிக்கரான நாஸ்தியாவுக்கு 6 வயதுதான் ஆகிறது. ஆனால் You Tube மூலம் அவர் பெறும் ஆண்டு வருமானம் சுமார் million 18 மில்லியனாகும் (சுமார் 132 கோடி). வீடியோ தளமான You Tube-ல் நாஸ்தியா 6 சேனல்களை இயக்குகிறார். தனது கல்வி மற்றும் வேடிக்கையான வீடியோக்கள் காரணமாக நாஸ்தியா மிகவும் பிரபலமாக உள்ளார்.

3 /4

ஐந்து நண்பர்களின் குழுவான டியூட் பெர்பெக்ட், வீடியோ தளமான யூடியூப்பில் அதிக வசூல் செய்த இரண்டாவது சேனலாகும். ஐந்து நண்பர்கள் தங்கள் வீடியோக்களில் வினோதமான ட்ரிக்குகளை செய்கிறார்கள். இவர்களது வீடியோக்கள் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமாக உள்ளன. 2019 ஆம் ஆண்டில், இந்த குழு யூடியூப்பில் 20 மில்லியன் டாலர் அதாவது சுமார் 147 கோடி ரூபாய் சம்பாதித்தது.  

4 /4

ரியான் காஜிக்கு 8 வயதுதான் ஆகிறது. இப்போது You Tube-ல் அதிக வருமானம் ஈட்டும் நபர் ரியான் தான். தொழில்நுட்ப தளமான பாக்கெட்-லிண்டின் அறிக்கையின்படி, ரியான் கடந்த ஆண்டு யூடியூப்பில் 25 மில்லியன் டாலர் அதாவது சுமார் 184 கோடி ரூபாய் சம்பாதித்தார். ரியான் ஒரு கல்வி தளத்திற்காக வீடியோக்களை உருவாக்குகிறார்.