வீட்டில் எவ்வளவு தங்கம் வைத்திருக்கலாம்... விதிகள் கூறுவது என்ன..!!

இந்தியாவில் தங்கம் முதலீடாக செய்ய்ப்படுவதை விட, நகையாக தான் அதிகம் வாங்கப்படுகிறது. தென்னிந்த்தியாவில், நம் வாழ்க்கையின் முக்கியமான தருணங்களில் இணைபிரியாமல் வருவது தங்கம்.இந்நிலையில், வீட்டில் எவ்வளவு தங்கம் வைத்திருக்கலாம் என்பது தெரியுமா?

தங்கம் என்பது இந்தியர்களிடையே மங்களகரமான விஷயமாகப் பார்க்கப்படுகிறது. அதிக தங்க நகைகள் வைத்திருப்பதை கௌரமாக நினைப்பவர்கள் ஏராளம். கல்யாணம், காது குத்து என வீட்டில் உள்ள அனைத்து விஷேங்களிலும், பரிசாகவும் சீதனமாகவும் கொடுக்கப்படும் தங்க நகைகளை வாங்கி நாம் வீட்டில் வைத்திருப்போம்.

1 /7

வருமான வரித்துறை சோதனையில் தங்க நகைகள் அல்லது தங்க கட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டு வரும் சம்பவங்கள் குறித்து நாம் கேள்விப்பட்டிருப்போம்.  இதை மனதில் வைத்து, மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT) 1994-ல் ஒரு அறிவுறுத்தலை வெளியிட்டது. 

2 /7

CBDT இன் இந்த அறிவுறுத்தலில், சோதனையின் போது தங்க நகைகள் அல்லது வேறு வடிவில் உள்ள தங்கத்தை குறிப்பிட்ட அளவு வரை பறிமுதல் செய்யக் கூடாது என்று வருமான வரி அதிகாரிகளுக்கு கூறப்பட்டது. இதற்காக, எவ்வளவு வைத்திருக்கலாம் வரம்புகள் நிர்ணயிக்கப்பட்டன.  

3 /7

திருமணமான பெண்களிடம் 500 கிராம் எடையுள்ள தங்க நகைகள் வைத்திருக்கலாம். திருமணமாகாத பெண்ணிடம் 250 கிராம் வரை தங்க நகைகள் வைத்திருக்கலாம். திருமணமாகாத ஆண் 100 கிராம் வரையிலான தங்கம் வைத்திருக்கலாம். 

4 /7

இதில், கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், இந்த வரம்பு குடும்பத்தில் ஒரு உறுப்பினருக்கானது. அதாவது குடும்பத்தில் இரண்டு திருமணமான பெண்கள் இருந்தால், மொத்த வரம்பு 500 கிராமில் இருந்து ஒரு கிலோவாக அதிகரிக்கும். 

5 /7

CBDT துறையின் இந்த அறிவுறுத்தல் தங்க நகைகளை வைத்திருக்க எந்த சட்டப்பூர்வ உரிமையையும் வழங்கவில்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டியது அவசியம். சோதனையின் போது தங்க நகைகள் பறிமுதல் செய்யப்படுவதில் இருந்து வரி செலுத்துவோருக்கு நிவாரணம் வழங்குவதே இதன் நோக்கம். 

6 /7

இந்த அறிவுறுத்தல்கள் குடும்ப நகைகள் அல்லது பிற நகைகளுக்கு மட்டுமே பொருந்தும். இருப்பினும், வருமான ஆதாரம் இல்லாமல் அதிக தங்கம் பிடிபட்டால் நடவடிக்கை எடுக்கப்படும். குடும்பத்திற்கு வெளியே யாரேனும் ஒருவர் தங்க நகைகள் வைத்திருந்தால், அதை வரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்யலாம்.

7 /7

முன்னதாக, இந்தியாவில் தங்கக் கட்டுப்பாடு சட்டம், 1968 அமலில் இருந்தது. இதன்படி, மக்கள் வரம்புக்கு மேல் தங்கம் வைத்திருக்க அனுமதிக்கப்படவில்லை. ஆனால், இந்த சட்டம் 1990 ஜூன் மாதம் ரத்து செய்யப்பட்டது. தற்போது, ​​ஒரு நபர் அல்லது குடும்பத்தினர் எவ்வளவு தங்கம் வைத்திருக்கலாம் என்பதற்கு சட்ட வரம்பு இல்லை.