22 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வெளியாகும் கமல்ஹாசனின் படம்!

Aalavandhan Re Release: கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 2001ம் ஆண்டு வெளியான ஆளவந்தான் படத்தை மீண்டும் திரையரங்கில் வெளியிட உள்ளனர்.

 

1 /6

உலகநாயகன் கமல்ஹாசன் மற்றும் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா இணைந்து பணியாற்றிய ஆளவந்தான் படம் கடந்த 2001ல் வெளியானது.   

2 /6

ஆளவந்தான் படம் வெளியாகி தற்போது 22 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது.  இந்நிலையில் இந்த படத்தை மீண்டும் திரையரங்குகளில் வெளியிட உள்ளனர்.  

3 /6

ஆளவந்தான் படம் உலகம் முழுவதும் 1000க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் பிரமாண்டமாக மறுவெளியீடு செய்யப்பட உள்ளது என்பது கூறப்படுகிறது.   

4 /6

வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ் தாணு இந்த படத்தை தயாரித்து இருந்தார்.  தனது ட்விட்டர் பக்கத்தில் மறுவெளியீடு குறித்து அறிவித்துள்ளார்.  

5 /6

கமலின் சிறந்த படைப்புகளில் ஒன்றாகப் ஆளவந்தான் போற்றப்படுகிறது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் கமலின் 'வேட்டையாடு விளையாடு' திரைப்படம் மீண்டும் வெளியாகி அமோக வெற்றி பெற்றது.  

6 /6

இப்படத்தில் கமல் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். மேலும் ரவீனா டாண்டன், மனிஷா கொய்ராலா, சரத் பாபு மற்றும் பலர் நடித்துள்ளனர்.