2.5 இலட்சம் ரூபாய் வரை டிஸ்கவுண்ட் தரும் ஜீப் 8வது ஆண்டு நிறைவுவிழா ஆஃபர்!

Jeep India discounts : ஜீப் இந்தியா ஆட்டோமொபைல் நிறுவனம், காம்பஸ் மற்றும் மெரிடியன் எஸ்யூவிகளுக்கு ரூ.2.50 லட்சம் வரை தள்ளுபடி வழங்குகிறது, இந்தத் தள்ளுபடி குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே செல்லுபடியாகும்.

ஜீப் காம்பஸ் கார், தற்போது ரூ.18.99 லட்சம் முதல் ரூ.32.41 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது

1 /8

ஜீப் மெரிடியன் காரின் விலை ரூ. 31.23 லட்சம் முதல் ரூ. 39.83 லட்சம் வரை எக்ஸ்-ஷோரூம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்தக் கார், எம்ஜி குளோஸ்டர் மற்றும் டொயோட்டா ஃபார்ச்சூனர் போன்ற மாடல்களுக்கு போட்டியாக இருக்கும் 

2 /8

ஜீப் இந்தியா ரூ. 2.50 லட்சம் வரை தள்ளுபடியுடன் 8வது ஆண்டு விழாவைக் கொண்டாடுகிறது

3 /8

ஜீப் இந்தியா காம்பஸ் மற்றும் மெரிடியன் எஸ்யூவிகளில் ரூ. 2.50 லட்சம் வரை தள்ளுபடி வழங்குகிறது, இது ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே செல்லுபடியாகும்,

4 /8

இரண்டரை லட்சம் ரூபாய் தள்ளுபடியைத் தவிர, எட்டாவது ஆண்டுவிழா கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக அதன் முழு தயாரிப்பு வரம்பிலும் வாகன பரிமாற்றம், லாயல்டி மற்றும் கார்ப்பரேட் நன்மைகளும் உண்டு

5 /8

ஜீப் வாடிக்கையாளர்களுக்கு கார் பராமரிப்பு மற்றும் பழுது நீக்கம் என கார் தொடர்பான சேவைகளுக்கு 7.8% தள்ளுபடிகள் கொடுக்கப்படுகிறது விற்பனைக்குப் பிறகான சலுகைகள் ஆகஸ்ட் 17 வரை செல்லுபடியாகும்.

6 /8

ஆகஸ்ட் 31 வரை செல்லுபடியாகும் ஜீப் வழங்கும் முக்கிய நன்மைகளில் ஒன்று ஜீப் காம்பஸ் கார் வாங்கினால், ரொக்கத் தள்ளுபடியாக ரூ.2.50 லட்சம் வரை பணப் பலன்கள் கிடைக்கும். இதேபோல, ஜீப் மெரிடியன் காருக்கு ரூ.2 லட்சம் வரை தள்ளுபடி உண்டு

7 /8

வாக்-இன் வாடிக்கையாளர்களுக்கு ரேங்லர் மற்றும் கிராண்ட் செரோக்கியின் தேர்ந்தெடுக்கப்பட்ட வகைகளில் சலுகைகள் கிடைக்கும்

8 /8

பொறுப்புத் துறப்பு: இணையத்தில் உள்ள தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரையில் உள்ள தகவலின் உண்மைத்தன்மைக்கு ஜீ நியூஸ் பொறுப்பேற்காது