ஆக. 13ஆம் தேதியான இன்று உலக இடது கை பழக்கமுடையோர் தினமாக (International Lefthanders Day) கொண்டாடப்படுகிறது. அந்த வகையில், கிரிக்கெட் வரலாற்றில் சிறந்த பத்து இடது கை பேட்டர்களை இங்கு காணலாம்.
இடது கை பழக்கமுடையவர்கள் என்றாலே அனைவரும் வித்தியாசமாக பார்ப்பார்கள். அதுவும் கிரிக்கெட்டில் இடது கை பேட்டர்களை (Left Hand Batters) பார்த்தாலே அனைவருக்கும் பிடிக்கும். அவர்களின் வித்தியாசமான ஷாட்கள், அதிரடியிலும் கலந்திருக்கும் அழகியல் ஆகியவற்றை பார்ப்பதற்கே ரம்மியாக இருக்கும். இடது கை பந்துவீச்சாளர்கள் பந்துவீசுவதும் அப்படிதான். அந்த வகையில், இங்கு கிரிக்கெட்டில் சிறந்த 10 இடது கை பேட்டர்களையும், அவர்கள் சர்வதேச அளவில் விளையாடிய போட்டிகள் (Matches), அதில் அவர்கள் அடித்த ரன்கள் (Runs), சதங்கள் (Centuries) குறித்து இங்கு பார்க்கலாம்.
10. அலெஸ்டர் குக்: இங்கிலாந்து வீரரான இவர் மொத்தம் 258 போட்டிகளில் விளையாடி உள்ளார். இவர் மொத்தம் 15 ஆயிரத்து 737 ரன்களை குவித்துள்ளார். அதில் 38 சதங்கள் அடங்கும்.
9. கிரேம் ஸ்மித்: தென்னாப்பிரிக்க வீரரான இவர் மொத்தம் 347 போட்டிகளில் விளையாடி உள்ளார். இவர் மொத்தம் 17 ஆயிரத்து 236 ரன்களை குவித்துள்ளார். அதில் 37 சதங்கள் அடங்கும்.
8. ஆலன் பார்டர்: ஆஸ்திரேலிய வீரரான இவர் மொத்தம் 429 போட்டிகளில் விளையாடி உள்ளார். இவர் மொத்தம் 17 ஆயிரத்து 697 ரன்களை குவித்துள்ளார். அதில் 30 சதங்கள் அடங்கும்.
7. சௌரவ் கங்குலி: இந்திய வீரரான இவர் மொத்தம் 424 போட்டிகளில் விளையாடி உள்ளார். இவர் மொத்தம் 18 ஆயிரத்து 575 ரன்களை குவித்துள்ளார். அதில் 38 சதங்கள் அடங்கும்.
6. டேவிட் வார்னர்: ஆஸ்திரேலிய வீரரான இவர் மொத்தம் 383 போட்டிகளில் விளையாடி உள்ளார். இவர் மொத்தம் 18 ஆயிரத்து 995 ரன்களை குவித்துள்ளார். அதில் 49 சதங்கள் அடங்கும்.
5. கிறிஸ் கெயில்: மேற்கு இந்திய வீரரான இவர் மொத்தம் 483 போட்டிகளில் விளையாடி உள்ளார். இவர் மொத்தம் 19 ஆயிரத்து 593 ரன்களை குவித்துள்ளார். அதில் 42 சதங்கள் அடங்கும்.
4. ஷிவ்நரைன் சந்தர்பால்: மேற்கு இந்திய வீரரான இவர் மொத்தம் 454 போட்டிகளில் விளையாடி உள்ளார். இவர் மொத்தம் 20 ஆயிரத்து 988 ரன்களை குவித்துள்ளார். அதில் 41 சதங்கள் அடங்கும்.
3. சனத் ஜெயசூர்யா: இலங்கை வீரரான இவர் மொத்தம் 586 போட்டிகளில் விளையாடி உள்ளார். இவர் மொத்தம் 21 ஆயிரத்து 032 ரன்களை குவித்துள்ளார். அதில் 42 சதங்கள் அடங்கும்.
2. பிரையன் லாரா: மேற்கு இந்திய வீரரான இவர் மொத்தம் 430 போட்டிகளில் விளையாடி உள்ளார். இவர் மொத்தம் 22 ஆயிரத்து 358 ரன்களை குவித்துள்ளார். அதில் 53 சதங்கள் அடங்கும்.
1. குமார் சங்ககாரா: இலங்கை வீரரான இவர் மொத்தம் 594 போட்டிகளில் விளையாடி உள்ளார். இவர் மொத்தம் 28 ஆயிரத்து 016 ரன்களை குவித்துள்ளார். அதில் 63 சதங்கள் அடங்கும்.