Jay Shah Net worth : ஐசிசி தலைவராகியிருக்கும் ஜெய்ஷா சொத்துமதிப்பு உத்தேசமாக 150 கோடி ரூபாய் இருக்கலாம் என தகவல்கள் கூறுகின்றன.
Jay Shah Net worth : பிசிசிஐ தலைவராக இருந்து இப்போது ஐசிசி தலைவராகியிருக்கும் ஜெய்ஷா தொழிலதிபரும் கூட. அவரின் படிப்பு மற்றும் சொத்து விவரங்களை பார்க்கலாம்.
ஜெய்ஷா 1988 ஆம் ஆண்டு செப்டம்பர் 22 ஆம் தேதி பிறந்தார். இவரின் முழுப் பெயர் ஜெய் அமித்பாய் ஷா. இந்திய உள்துறை அமைச்சர் ஜெய்ஷாவின் மகன்.
ஜெய் ஷா குஜராத்தில் தான் பள்ளிப்படிப்பை முடித்தார். அதன் பிறகு குஜராத்தில் உள்ள நிர்மா பல்கலைக்கழகத்தில் பி.டெக் முடித்துள்ளார்.
கல்லூரிப் படிப்பை முடித்த அடுத்த ஆண்டு, ஜெய்ஷா குஜராத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் இயக்குநராகப் பணியாற்றத் தொடங்கினார்.
இவர் தனது கல்லூரி தோழியான ரிஷிதா படேலை 2015 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவரது தாயார் சோனல் ஷா ஒரு பொருளாதார நிபுணர்.
2009 ஆம் ஆண்டு முதல் ஜெய் ஷா அகமதாபாத்தில் உள்ள மத்திய கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாகக் குழு உறுப்பினராக இருக்கிறார். பின்னர், செப்டம்பர் 2013 ஆம் ஆண்டு குஜராத் கிரிக்கெட் சங்கத்தின் (ஜிசிஏ) இணைச் செயலாளராக ஆனார்.
திருமணமான அதே ஆண்டில், ஜெய் ஷா பிசிசிஐயில் நிதி மற்றும் சந்தைப்படுத்தல் குழுவின் உறுப்பினராக சேர்ந்தார். இவரின் வருகையால் ஐபிஎல் வருமானம் எகிறியது.
பிசிசிஐயின் செயலாளராக இருப்பதோடு, ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் (ஏசிசி) தலைவராகவும் ஜெய் ஷா உள்ளார். அவர் 2021 ஆம் ஆண்டு ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவரானார்.
இவரின் சொத்து மதிப்பை பொறுத்தவரை பல்வேறு ஊடகங்களில் இருந்து பெறப்பட்ட தகவல்களின்படி, ஜெய் ஷாவின் மொத்த சொத்து மதிப்பு ரூ.125-150 கோடி.