Jawan Pre Release Event: களைக்கட்டிய ஜவான் திருவிழா! வைரலாகும் புகைப்படங்கள்!

Jawan Pre Release Event: ஜவான் பட விழா நேற்று நடந்தது. இதில் படக்குழுவினர் பங்கேற்று நடனமாடினர். இவ்விழாவின் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது. 

1 /9

ஜவான் பட விழா நேற்று சென்னை தாம்பரத்தில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் நடைப்பெற்றது. இதில் படக்குழுவினர் கலந்து கொண்டனர். 

2 /9

விஜய் சேதுபதி மற்றும் அனிருத் ஆகியோர் விழா நடைபெறும் போது அமர்ந்திருந்த காட்சி. 

3 /9

நேற்று விழாவிற்கு விஜய் சேதுபதி வேட்டி சட்டை அணிந்து வருகை புரிந்தார். இவர், ஷாருக்கானை வரவேற்ற காட்சி. 

4 /9

விஜய் சேதுபதி நேற்றைய விழாவில் பேசுகையில், தான் காதலித்த ஒரு பெண் ஷாருக்கானை காதலித்ததாகவும் அவரை இத்தனை வருடங்கள் கழித்து பழி வாங்கி விட்டதாகவும் தெரிவித்தார். 

5 /9

ஷாருக்கான் நேற்று, ‘சென்னை எக்ஸ்பிரஸ்’ பட பாடலுக்கு பிரியாமணியுடன் சேர்ந்து நடனமாடினார். 

6 /9

ஜவான் பட இயக்குநர் அட்லி அவரது மனைவி பிரியாவுடன் அமர்ந்திருந்த காட்சி. 

7 /9

சென்னை வந்த ஷாருக்கானிற்கு தமிழ் மக்கள் கோலாகலமான வரவேற்பினை அளித்தனர். 

8 /9

ஷாருக்கான், இசையமைப்பாளர் அனிருத்தை தனது மகன் போல என பேசுகையில் குறிப்பிட்டார். 

9 /9

ஜவான் படத்தின் மொத்த படக்குழுவினரும் இறுதியில் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.