ஜெய் - அருண்ராஜா கூட்டணியில் லேபிள் வெப் சீரிஸ்! சிறப்பம்சங்கள் என்ன?

Label Web Series: கனா படத்தின் மூலம் அறிமுகமான இயக்குனர் அருண்ராஜா இயக்கத்தில் உருவாகி உள்ள புதிய வெப் தொடர் ஹாட்ஸ்டாரில் வெளியாக உள்ளது.

 

1 /5

நெஞ்சுக்கு நீதி படத்தை தொடர்ந்து அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் ஜெய் நடிப்பில் உருவாகி வரும் வெப் சீரிஸ் 'லேபில்'.   

2 /5

இந்தத் தொடரில் கதாநாயகியாக தன்யா ஹோப் நடிக்க மகேந்திரன், ஹரிசங்கர் நாராயணன், சரண் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். முத்தமிழ் படைப்பகம் தயாரிக்கும் இந்தத் தொடருக்கு சாம் சி.எஸ் இசையமைக்கிறார்.   

3 /5

இந்த சீரிஸ் டிஸ்னி + ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. திரைக்கதையை இயக்குநர் அருண்ராஜா காமராஜ் எழுத, கூடுதல் திரைக்கதை மற்றும் வசனங்களை ஜெயச்சந்திர ஹாஷ்மி எழுதியுள்ளார்.   

4 /5

இவர் சர்வதேசத் திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு கவனம் பெற்ற ஸ்வீட் பிரியாணி குறும்படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.   

5 /5

படத்தின் தலைப்பான லேபில், கதையில் முக்கிய பங்கு இருக்கும் என்று கூறப்படுகிறது.  இது தொடர்பாக படக்குழு சமீபத்தில் ஒரு வீடியோவையும் வெளியிட்டுள்ளது.