IPL Auction 2023: ஐபிஎல் அணிகள் ஏலத்திற்கு எவ்வளவு பணத்தை பயன்படுத்த முடியும்?

IPL Auction 2023: இந்தியன் பிரிமீயர் லீக் எனப்படும் ஐபிஎல் டி20 தொடரின், 15ஆவது சீசன் அடுத்தாண்டு கோடை விடுமுறையில் நடைபெற உள்ளது. கரோனா பெருந்தொற்றால் கடந்த இரண்டு ஆண்டுகளாக போட்டிகள் பெரும்பாலும் ஐக்கிய அரபு அமீரகத்திலும், தேர்ந்தெடுக்கப்பட்ட சில இந்திய நகரங்களிலும் மட்டுமே நடத்தப்பட்டன. 

ஐபிஎல் தொடரில், கடந்தாண்டு மெகா ஏலம் நடத்தப்பட்ட நிலையில், வரும் சீசனுக்கான மினி ஏலம் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. ஒவ்வொரு அணியிடமும் எஞ்சியுள்ள பணம் எவ்வளவு? தெரிந்துக் கொள்வோம்...

மேலும் படிக்க | பெஸ்ட் பௌலர் உம்ரான் மாலிக் - பாராட்டு பத்திரம் வாசிக்கும் வில்லியம்சன்

1 /10

கடந்த ஏலத்தின் முடிவில் கேகேஆர் அணியிடம் 45 லட்சம் ரூபாய் உள்ளது. இன்னும் 5 கோடி ரூபாயுடன் ஷ்ரேயாஸ் ஐயர் அணி களமிறங்கவுள்ளது. அதாவது சுமார் 5.45 கோடி ரூபாய் கேகேஆர் அணி வைத்திருக்கிறது.

2 /10

ஹர்திக் பாண்டியா அணி சாம்பியனாக வலம் வந்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. கடந்த ஏலத்திற்குப் பிறகு குஜராத் டைட்டன்ஸ் அணி, ரூ.15 லட்சம் ரூபாய் வைத்துள்ளது. இம்முறை மொத்தம் 5.15 கோடி ரூபாய் இந்த அணியிடம் உள்ளது.

3 /10

சஞ்சு சாம்சன் கடந்த ஆண்டு ராஜஸ்தானை இறுதிப் போட்டிக்கு வழிநடத்தினார். கடந்த ஐபிஎல் ஏலத்தின் முடிவில் ராஜஸ்தான் கையில் 95 லட்சம் உள்ளது. இந்த ஏலத்தில் 5.95 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கலாம்.

4 /10

கடந்த ஏலத்தின் முடிவில், மகேந்திர சிங் தோனியின் சென்னை அணியிடம் 2.95 கோடி ரூபாய் உள்ளது. இன்னும் ஐந்து கோடி ரூபாயுடன் சென்னை ஏலத்தில் இறங்கலாம். அதாவது, 7.95 கோடி ரூபாய்க்கு சிஎஸ்கே ஏலத்தில் இறங்க உள்ளது.

5 /10

ஆர்சிபி அணியிடம் ரூ.1.55 கோடி உள்ளது. மேலும் ஐந்து கோடி ரூபாய் உடன், அதாவது 6.55 கோடி ரூபாயுடன் ஆர்சிபி ஏலத்தில் இறங்குகிறது.

6 /10

ஐந்து முறை ஐபிஎல் பட்டத்தை வென்றவர் கடந்த ஆண்டு லீக் கட்டத்திலேயே வெளியேறினார். ரோகித் ஷர்மா அணி இந்த முறை திரும்ப வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது. கடந்த ஏலத்திற்குப் பிறகு மும்பை அணி, ரூ.10 லட்சத்தை வைத்துள்ளது. இம்முறை 5.10 கோடி ரூபாயுடன் நீதா அம்பானி அணி ஏலத்தில் களம் இறங்குவார்.

7 /10

ரிஷப் பந்த் அணியால் ரன்களைக் குறைக்கவே முடியவில்லை. கடந்த ஏலத்தின் முடிவில் டெல்லியிடம் 10 லட்சம் ரூபாய் உள்ளது. மொத்தம் 5.10 கோடி ரூபாயுடன் இந்த அணி ஏலத்தில் களம் இறங்கும்.  

8 /10

15 வருட ஐபிஎல் தொடரில் ப்ரீத்தி ஜிந்தா அணி சிறப்பாக செயல்படவில்லை. இந்த முறை மீண்டும் கேப்டன் பதவி மயங்க் அகர்வால் கையிலிருந்து ஷிகர் தவான் கைக்கு சென்றது. கடைசி ஏலத்திற்குப் பிறகு, பஞ்சாப் கிங்க்ஸ், ரூ.3.45 கோடியை வைத்துள்ளது. இதன் மூலம் மேலும் ஐந்து கோடி ரூபாயுடன் பஞ்சாப் ஏலத்தில் இறங்கலாம். அதாவது பஞ்சாப் கிங்ஸ் ஏலத்திற்காக மொத்தம் ரூ.8.45 கோடி வைத்துள்ளது.

9 /10

லக்னோ விளையாடிய முதல் வருடத்தில் கேஎல் ராகுல் தலைமையில் நாக் அவுட் ஆனது. கடைசி ஏலத்திற்குப் பிறகு சஞ்சீவ் கோயங்கா அணியிடம் பணம் எதுவும் இல்லை. புதிய சீசன் ஏலத்தில் கெளதம் கம்பீர் அணி 5 கோடி ரூபாயுடன் களமிறங்கவுள்ளது.

10 /10

கடந்த ஆண்டு ஏலத்தின் முடிவில் கேன் வில்லியம்சன் அணியிடம் ரூ.10 லட்சம் இருந்தது. இந்த முறை, மொத்தம் 5.10 கோடி ரூபாயுடன் ஏலத்தில் எஸ்.ஆர்.எச் அணி களமிறங்கும்