போலந்து அகதி முகாமில் இந்தியாவின் ‘மேலை நாட்டு மருமகள்; உக்ரைன் போரினால் ஏற்பட்ட பிரிவு!

உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே போர் நடந்து வருகிறது, இந்த நேரத்தில் ஏராளமான மக்கள் உக்ரைனை விட்டு வெளியேறி வேறு இடங்களில் தஞ்சம் அடைவதும் தொடர்ந்து நடந்து வருகிறது. உக்ரைனை ஒட்டியுள்ள நாடுகளில் உள்ள அகதிகள் முகாம்களுக்கு உக்ரைன் குடிமக்கள் தொடர்ந்து வருகின்றனர். இதற்கிடையில், போலந்தின் அகதிகள் முகாமில், இந்தியரை மணந்த மேலை நாட்டு மருமகளும் உள்ளார். கர்ப்பமாக இருக்கும் நிலையில், இந்தியாவில் உள்ள தனது கணவருடன் சேர்த்து வைக்க வேண்டும் என மோடி அரசின் உதவியை நாடியுள்ளார். 

1 /5

Zee Media பத்திர்க்கையாளர்கள், போலந்தின் வார்சாவில் உள்ள அகதிகள் முகாம் பற்றிய தகவலை சேகரிக்கையில், இந்த அகதிகள் முகாமில், டெல்லியில் இருக்கும் இந்தியரான ஒரு உக்ரைனியப் பெண்ணைச் சந்தித்தனர். இந்நிலையில், அந்த பெண் கர்ப்பமாக இருப்பதால், தன்னை டெல்லியில் உள்ள தனது கணவரிடம் சேர்த்து வைக்குமாறு Zee Media மூலம் இந்திய அரசிடம் முறையிட்டுள்ளார்.

2 /5

உக்ரைன் நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் இந்திய குடிமகனை திருமணம் செய்து கொண்ட புகைப்படங்களும் வெளியாகியுள்ளன. புகைப்படத்தில், இந்தியக் குடிமகன் ஒருவர் உக்ரேனியப் பெண்ணுக்கு திருமாங்கல்யம் அணிவிப்பதைக் காணலாம்.

3 /5

உக்ரேனிய பெண் இந்திய குடிமகனை இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டார்.  

4 /5

மற்றொரு புகைப்படத்தில், இந்திய மணமகன் மற்றும் உக்ரைன் மணமகளுடன் மாலை மாற்றிக் கொள்வதைக் காணலாம்.

5 /5

உக்ரேனிய பெண்ணும் இந்திய குடிமகனும் திருமணத்தின் போது அக்னியை வலம் வருவதைக் காணலாம்.