Indian Railways... கூடுதலாக 10,000 ரயில்பெட்டிகள்... ரயில்வேயின் அதிரடி திட்டம்..!!

Indian Railways: ஏழை எளிய மக்களின் போக்குவரத்து ஆதாரமாக உள்ள இந்திய ரயில்வே, உலகின் மிகச் பெரிய ரயில்வே நெட்வொர்க்கில் ஒன்றாகும். ரயிலில் பயணிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், சுமார் 10,000 ஏசி அல்லாத  பெட்டிகளை தயாரிக்கும் திட்டத்திற்கு இந்திய ரயில்வே ஒப்புதல் அளித்துள்ளது.

பயணிகளின் வசதியை மேம்படுத்தும் நோக்கில்,  ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் இந்திய ரயில்வே சுமார் 10,000 ஏசி அல்லாத  பெட்டிகளை தயாரிக்கும் திட்டத்திற்கு இந்திய ரயில்வே ஒப்புதல் அளித்துள்ளது.  இந்த திட்டத்தை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

1 /8

இந்தியாவில், ரயிலில் பயணிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், ஏசி அல்லாத பெட்டிகளில் பயணிக்கும் ஏழை எளிய மக்களின் தேவையை கருத்தில் கொண்டு, கூடுதல் பெட்டிகளின் தேவையை பூர்த்தி செய்யும் நோக்கில், ரயில்வே முக்கிய முடிவு ஒன்றை எடுத்துள்ளது.

2 /8

2024-25 மற்றும் 2025-26 நிதியாண்டுகளில், 5,300 க்கும் மேற்பட்ட ஏசி அல்லாத பெட்டிகளை தயாரிக்க ரயில்வே திட்டமிட்டுள்ளது. இதில், அம்ரித் பாரத் ரயிலுக்கான பெட்டிகள் உட்பட 2,605 ஜெனரல் பெட்டிகள், அம்ரித் பாரத் ரயிலின் ஸ்லீப்பர் பெட்டிகள்  உட்பட 1,470 ஏசி அல்லாத ஸ்லீப்பர் பெட்டிகள், 32 அதிக திறன் கொண்ட பார்சல் வேன்கள், 55 பேன்ட்ரி கார்கள் ஆகியவை அடங்கும்.

3 /8

2025-2026 நிதியாண்டின் ரயில் பெட்டிகள் தயாரிப்பு திட்டத்தில்,  அம்ரித் பாரத் ஜெனரல் பெட்டிகள் உட்பட 2,710 ஜெனரல் பெட்டிகள், அம்ரித் பாரத் ஸ்லீப்பர் பெட்டிகள்  உட்பட 1,910 AC அல்லாத ஸ்லீப்பர் பெட்டிகள், 200 அதிக திறன் கொண்ட பார்சல் வேன்கள், 110 பேன்ட்ரி கார்கள் ஆகியவை அடங்கும்.

4 /8

சமீபத்தில், இந்திய ரயில்வே சாமானியர்களுக்காக இரண்டு வந்தே பாரத்திற்கு இணையாக,  ஏசி அல்லாத அம்ரித் பாரத் புஷ் புல் ரயில்களை அறிமுகப்படுத்தியது. இந்த புதிய ரயில்கள்,  130 கிமீ வேகத்தில் செல்லக் கூடியவை.  இரண்டு இன்ஜின்களுடன் கூடிய இந்த ரயில், பட்ஜெட் கட்டணத்தில் அதிக வேக ரயிலில் பயணிக்க விரும்புபவர்களுக்கு ஏற்ற ரயிலாகும்.

5 /8

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலின் பெரும் வரவேற்புக்கு பிறகு,  இந்திய இரயில்வே இப்போது குறுகிய தூர நகரங்களுக்கு இடையேயான பயணத்திற்காக வந்தே மெட்ரோவையும், நீண்ட தூர இரவு நேர பயணத்திற்காக வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்களையும் தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

6 /8

பிரதமர் மோடி 3.0 பதவி ஏற்றுக் கொண்ட நிலையில், ரயில்வே துறைக்கான முதல் 100 நாள் செயல் திட்டத்தின் ஒரு பகுதியாக, அரசாங்கம் சோதனைக்காக முதல் வந்தே மெட்ரோ மற்றும் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் மாடல்களை தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

7 /8

வந்தே மெட்ரோ ரயில்கள் RCF கபுர்தலா மற்றும் ஐசிஎஃப் சென்னை தொழில்சாலையில் தயாரிக்கப்பட்டு வருகின்றன . வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலை பாரத் எர்த் மூவர்ஸ் லிமிடெட் (Bharat Earth Movers Limited BEML) தயாரித்து வருகிறது குறிப்பிடத்தக்கது. 

8 /8

வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்  சோதனை ஓட்டம் ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்குள் நடைபெறும் என்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கடந்த மாதம் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.