Indian Railways: தூய்மைக்கு பெயர் பெற்ற '5' ரயில் நிலையங்கள்

தூய்மையான இரயில் நிலையங்கள்: நாம் அனைவரும் இந்திய இரயில்வே இரயில்களில் ஏதாவது ஒரு கட்டத்தில் பயணம் செய்திருக்க வேண்டும். முன்பெல்லாம் ரயில் நிலையங்கள் மிகவும் அசுத்தமாக இருந்தன. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக ரயில்வே துறை மேற்கொண்டு வரும்  முயற்சிகள் காரணமாக, பல ரயில் நிலையங்கள் சுத்தமாக காட்சி அளிக்கின்றன. இந்தியாவில் உள்ள சில தூய்மையான ரயில் நிலையங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.

 

1 /5

பிங்க் சிட்டி என்று அழைக்கப்படும் ஜெய்ப்பூர் நகரத்தில் உள்ள ஜெய்ப்பூர் சந்திப்பு ரயில் நிலையம் தூய்மையானது. ராஜஸ்தானில் உள்ள ஒரே ரயில் நிலையம் ஜெய்ப்பூர் ஆகும், அங்கு 88 அகலப் பாதை மற்றும் 22 மீட்டர் கேஜ் ரயில்கள் ஒரு நாளில் வந்து சேரும். இந்த ரயில் நிலையம் சுற்றுலாவை மேம்படுத்துகிறது. இங்குள்ள தூய்மையும் அழகும் அனைவரையும் மகிழ்விக்கும்.  

2 /5

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் மிகப்பெரிய ரயில் நிலையம் ஜம்மு தாவி. இந்த ரயில் நிலையம் இந்தியாவின் தூய்மையான ரயில் நிலையங்களில் ஒன்றாகப் புகழ் பெற்றது. சுற்றுலா பயணிகள் காஷ்மீர் பள்ளத்தாக்குக்கு செல்ல இந்த நிலையத்தை அடைய வேண்டும். இங்குள்ள அழகிய சமவெளிகளைப் போலவே ஜம்மு காஷ்மீரில் உள்ள இந்த ரயில் நிலையமும் மிகவும் சுத்தமாக இருக்கிறது.

3 /5

ஆந்திராவில் உள்ள விஜயவாடா ரயில் நிலையம் தூய்மையில் சிறந்ததாக உள்ளது. விஜயவாடாவில் உள்ள கோவில்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை, தொலைதூரத்தில் இருந்தும் மக்கள் வந்து செல்வார்கள். இருப்பினும், அந்த இடத்தின் தூய்மை பராமரிக்கப்பட்டு வருகிறது திருப்தியளிக்கிறது.  

4 /5

ஜோத்பூர் ரயில் நிலையம் இந்தியாவின் தூய்மையான ரயில் நிலையங்களில் ஒன்றாகும். இங்கு பயணிகள் உலகத்தரம் வாய்ந்த வசதிகளைப் பெறுகின்றனர். சுத்தம் முதல் பராமரிப்பு வரை அனைத்தும் உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது.  

5 /5

ஹரித்வார் சந்திப்பு ரயில் நிலையம் ஹரித்வார் நகரின் முக்கிய ரயில் நிலையமாகும். ஹரித்வார் அதன் ஆன்மீக ஸ்தலங்களுக்கு மிகவும் பிரபலமானது. இந்தியாவின் தூய்மையான ரயில் நிலையங்களின் பட்டியலில் ஹரித்வார் சந்திப்பு ரயில் நிலையமும் சேர்க்கப்பட்டுள்ளது.