Indian Actors 100 Crore Openers : இந்திய நடிகர்கள் சிலருடையை படங்கள் வெளியாகும் போது, முதல் நாளிலேயே வசூல் தாறுமாறாக எகிறுவதுண்டு. அவை என்னென்ன படங்கள் என்பதையும், எந்த நடிகர்களின் படங்கள் என்பதையும் இங்கு பார்ப்போம்.
Indian Actors 100 Crore Openers : இந்திய திரைப்படங்கள் பல, சமீப காலமாக பல கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக, தமிழ் மற்றும் பாலிவுட் படங்கள் பல பல கோடி செலவில் எடுக்கப்படுகின்றன. அப்படி எடுக்கப்படும் படங்கள் பல, முதல் நாளிலேயே சுமார் ரூ.100 கோடிக்கும் மேலான வசூலை பெறுகிறது. அந்த வகையில், எந்த இந்திய நடிகர்களின் படங்கள் முதல் நாளிலேயே ரூ.100 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது என்பதை இங்கு பார்ப்போமா?
தெலுங்கு திரையுலகின் டாப் நடிகர்களுள் ஒருவர், ராம் சரண். இவர் நடிப்பில் 2022ஆம் ஆண்டு வெளியான படம், ஆர் ஆர் ஆர். இந்த படத்தை ராஜமௌலி இயக்கியிருந்தார். இப்படம், முதல் நாளிலேயே 100 கோடி வசூலை தாண்டியதாக கூறப்படுகிறது.
சூப்பர் ஸ்டார் குடும்பத்தை சேர்ந்த ஜூனியர் என்.டி.ஆர், தென்னிந்தியாவின் ஹிட் பட நாயகர்களுள் ஒருவர். இவரும் ஆர் ஆர் ஆர் படத்தில் நடித்திருந்தார்.
ரன்பீர் கபூர் நடிப்பில் கடந்த ஆண்டு அனிமல் திரைப்படம் வெளியானது. இந்த படத்தை சந்தீப் ரெட்டி வங்கா இயக்கியிருந்தார். இந்த படம், உலகளவில் முதல் நாளிலேயே 100 கோடி வசூல் செய்ததாக கூறப்படுகிறது.
விஜய் நடித்த லியோ திரைப்படம், கடந்த ஆண்டு வெளியானது. இந்த படம், உலகளவில் ரூ.100 கோடிக்கும் மேல் வசூலித்திருக்கிறது.
யாஷ் நடிப்பில் கேஜிஎஃப் சேப்டர் 2 படம் 2022ஆம் ஆண்டு வெளியானது. இந்த படம் உலகளவில் 164 கோடி வரை வசூலித்ததாக கூறப்படுகிறது.
ஷாருக்கான் நடித்த பதான் மற்றும் ஜவான் படம் கடந்த ஆண்டு வெளியானது. இந்த படங்கள், கிட்டத்தட்ட ரூ.1000 கோடிக்கும் மேல் மொத்தமாக வசூலித்திருந்தது. இப்படங்களின் முதல் நாள் வசூல் உலகளவில் ரூ.100 கோடியை தாண்டியதாக கூறப்படுகிறது.
இந்திய அளவில் பெரிய நடிகராக வளர்ந்து நிற்பவர், பிரபாஸ். இவரது படங்கள், தமிழகத்தில் பெரிதும் வெற்றி பெறுவதில்லை என்றாலும், பாலிவுட் மற்றும் பிற தென்னிந்திய மாநிலங்களிலும், உலகளவிலும் நல்ல வசூலை பெற்று வருகிறது. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான கல்கி 2898 ஏடி படம், உலகளவில் முதல் நாளிலேயே ரூ.180 கோடியை தாண்டியிருப்பதாக கூறப்படுகிறது.
பிரபாஸின் பிற படங்களான பாகுபலி 2, சஹோ, ஆதி புருஷ், சலார் ஆகிய படங்களும் முதல் நாளிலேயே ரூ.100 கோடி வசூலை தாண்டியிருக்கின்றன.