IND vs AUS: ஜாலியாக ஹோலி கொண்டாடிய ஆஸ்திரேலிய வீரர்கள்!

Australian Players Celebrated Holi Festival: நாடு முழுவதும் இன்று ஹோலி பண்டிகை கொண்டாடப்பட்ட நிலையில், இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களும் அப்பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்தனர்.

 

 

 

 

1 /5

இந்தியா உடன் நான்காவது டெஸ்ட் போட்டியில் நாளை ஆஸ்திரேலிய அணி மோதுகிறது. இப்போட்டி, குஜராத் அகமதாபாத் நகரில் நடக்கிறது. இன்று ஹோலி பண்டிகையை முன்னிட்டு அகமதாபாத் நகரில் ஆஸ்திரேலிய வீரர்கள் ஹோலி கொண்டாடினர். 

2 /5

ஆஸ்திரேலிய அணியினர் ஹோலி பண்டிகையை கொண்டாடிய புகைப்படங்களை மார்னஸ் லபுஷேன் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.   

3 /5

லபுஷேன் உடன் ஸ்டீவ் ஸ்மித், பீட்டர் ஹாண்ட்ஸ்கம்ப், மாட் குஹ்னெமன், அலெக்ஸ் கேரி உள்ளிட்டோர் ஹோலி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். 

4 /5

நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்தியா வென்றால், எளிதாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதிபெறும். 

5 /5

மூன்று போட்டிகள் முடிவடைந்த நிலையில், இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.