பிரிவு உபசார விருந்தில் பத்ம விருது பெற்றவர்களுடன் அனைத்து முக்கிய அரசியல்வாதிகளும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வின் சில புகைப்படங்கள் இங்கே.
தற்போதைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது ஐந்தாண்டு பதவிக் காலத்தை முடித்துக்கொண்டு ஜூலை 24ஆம் தேதி பதவியில் இருந்து ஓய்வு பெறுகிறார். இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி பிரிவு உபசார நடத்தப்பட்டது. பிரியாவிடை விருந்தில் பத்ம விருது பெற்றவர்களுடன் அனைத்து முக்கிய அரசியல்வாதிகளும் கலந்து கொண்டனர். இந்த மகிழ்ச்சியான நிகழ்வின் சில புகைப்படங்கள் இங்கே.
பிரதமர் நரேந்திர மோடியின் இல்லத்தில் பிரிவு உபசார விருந்து அஇக்கப்பட்டது. விழாவிற்கு தனது மனைவி சவிதா கோவிந்துடன் வந்த குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கலந்து கொண்டார்.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்ட பிரிவு உபசார விருந்துக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, மத்திய அமைச்சரவை உறுப்பினர்கள், பல்வேறு மாநில முதல்வர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களும் அழைக்கப்பட்டனர். இந்த விருந்தில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவும் கலந்து கொண்டார். துணை ஜனாதிபதியாக இருக்கும் இவரது பதவிக்காலம் அடுத்த மாதம் ஆகஸ்ட் 10ம் தேதியுடன் முடிவடைகிறது. தேசிய ஜனநாயக கூட்டணியின் ஜக்தீப் தங்கர் மற்றும் எதிர்க்கட்சியின் மார்கரெட் ஆல்வா ஆகியோர் புதிய துணை ஜனாதிபதிக்கான தேர்தலில் வேட்பாளர்களாக உள்ளனர்.
நாட்டிலேயே முதன்முறையாக பழங்குடியினத்தைச் சேர்ந்த ஒருவர் குடியரசுத் தலைவர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அதனால்தான் இந்த பிரிவு உபசார விருந்துக்கு பல பெரிய பழங்குடியின தலைவர்களை பிரதமர் மோடி அழைத்திருந்தார். இந்த நிகழ்வில் அனைத்து பழங்குடியின தலைவர்களும் மிகுந்த மகிழ்ச்சியுடன் விருந்தில் பங்கேற்றனர்.
பிரதமர் நரேந்திர மோடி, குடியரசுத் தலைவருக்கு வழங்கிய பிரிவு உபசார விருந்துக்கு பத்ம விருது பெற்ற பலரை அழைத்திருந்தார். இதில் 4 முறை உலக குத்துச்சண்டை சாம்பியனான எம்.சி.மேரி கோம் உட்பட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் ஜூலை 24ம் தேதி முடிவடைகிறது. நாட்டின் புதிய குடியரசுத் தலைவராக திரௌபதி முர்மு நாளை மறுநாள் அதாவது ஜூலை 25ஆம் தேதி காலை 10.15 மணிக்கு நாடாளுமன்ற மைய மண்டபத்தில் பதவியேற்கிறார். பதவிப் பிரமாணம் செய்து கொண்ட பிறகு அவருக்கு முப்படையினரும் மரியாதை செலுத்துவார்கள்.