தாடி வளர்ச்சியை அதிகரிக்கும் '5' உணவுகள்

நீண்ட கருகரு தாடி, முறுக்கு மீசை என ஸ்டைல் செய்து கெத்து காட்டுவதுதான் இன்றைய இளைஞர்களிம் டிரெண்டிங். தாடி வளர்ச்சிக்கு, உங்களுக்கு நிச்சயமாக வைட்டமின்கள், புரதங்கள் மற்றும் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் தேவை. தாடியின் வளர்ச்சிக்கு மட்டுமின்றி உங்கள் முக அழகையும் பளபளப்பாக்க உதவுகின்றன. எனவே நீங்களும் தாடி வளர்க்க விரும்பினால், கண்டிப்பாக இந்த ஐந்து உணவுகளை கட்டாயம் சேர்த்துக்கொள்ளுங்கள்.

 

1 /5

மீன்: மீன்களில், முக்கியமாக கடல் கொவிஞ்சி மீன்களை உட்கொள்ள வேண்டும். இதில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் இருப்பதால், உடலுக்கு நல்ல ஊட்டச்சத்து கிடைக்கும். இதனால் தாடி முடி அடர்த்தியாக வளரும்.

2 /5

தானியங்கள்: புரதம் நிறைந்த உணவுகள் உடலுக்கும் முக்கியம். அதனால்தான் முழு தானியங்களில் செய்யப்பட்ட உணவுகளை சாப்பிட மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். இந்த தானியங்கள் உடலில் உள்ள புரதச்சத்து குறைபாட்டை போக்குகிறது. இதனால் தாடி வளர உதவுகிறது.

3 /5

கீரைகள்: கீரைகள் உடலுக்கு நல்ல ஊட்டச்சத்தை அளிக்கிறது. பசலைக்கீரையில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, ஃபோலிக் அமிலம், கால்சியம், இரும்புச்சத்து போன்றவை உள்ளது. இவை உடலுக்குத் தேவையான சத்துக்களை வழங்குகிறது. அத்துடன் இது தாடி வளர்ச்சிக்கு உதவுகிறது.  

4 /5

பூசணி விதைகள்: இந்த விதைகள் தாடி வளர்ச்சிக்கு உதவும் என்று நம்பப்படுகிறது. ஆம், இதில் உள்ள ஜிங்க் உள்ளடக்கம் தாடியை அடர்த்தியாக வளர வைக்க உதவுகிறது.

5 /5

தேங்காய் எண்ணெய்: தேங்காய் எண்ணெய் பொதுவாக உணவுகளில் பயன்படுத்தப்படும். ஆனால் இதன் பின்னணியில் உள்ள காரணம் உங்களை வியக்க வைக்கும். தேங்காய் எண்ணெயில் அசாதாரண ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இந்த சூழலில், அதை உணவில் பயன்படுத்துவது நன்மை பயக்கும்.