கணவர் விவாகரத்து நோட்டீஸ் அனுப்பினார், இதனால் வருத்தமடைந்த பெண் மருத்துவர் 7 வயது மகனைக் கொன்ற சம்பவம் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமல்ல, மகனைக் கொன்ற பிறகு அந்த பெண் மருத்துவர் தற்கொலை செய்துக் கொண்டார்.
புதுடெல்லி: ஆந்திராவின் ராஜமுந்திரியில் நடைபெற்ற மிகவும் துயரமான சம்பவம் வெளிச்சத்துக்கு வந்து அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, 33 வயதான பெண் மருத்துவர் லாவண்யா தோத்தமஷெட்டி (Lavanya Donthamsetty) தனது 7 வயது மகனை கொன்ற பிறகு தற்கொலை செய்துக் கொண்டார். தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை மற்றும் போலீசார் இந்த வழக்கை விசாரித்து வருகின்றனர். (புகைப்பட ஆதாரம்- பேஸ்புக்)
Also Read | அரசியல் கட்சியைத் தொடங்காமலேயே ரஜினி தேர்தலில் செல்வாக்கு செலுத்துவார்
லாவண்யாவின் தந்தையும் ஒரு மருத்துவர் தான். ராஜமுந்திரியில் உள்ள ராஜஹமஹேந்திரவரம் (Rajahmahendravaram) என்ற இடத்தில் உள்ள புத்தர் மருத்துவமனையின் உரிமையாளர் லாவண்யாவின் தந்தை. பெண் மருத்துவர் லாவண்யா, தோல் மருத்துவர்.
தெலுங்கானாவின் வாரங்கலில் வசிக்கும் வம்சி கிருஷ்ணாவை சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார் லாவண்யா. இவர்களுக்கு நிஷாந்த் என்ற 7 வயது மகன் உண்டு.
லாவண்யாவிற்கும் அவரது கணவர் வம்சிக்கும் இடையிலான உறவுகள் சில காலமாக சரியாக இல்லை. அவர் 2 மாதங்களுக்கு முன்பு தனது தந்தையின் வீட்டிற்கு வந்திருந்தார்.
அவரது கணவர் வம்சி கிருஷ்ணா சமீபத்தில் விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியதாகவும், அதன் பின்னர் மருத்துவர் லாவண்யா மன அழுத்தத்தில் இருந்ததாகவும் லாவண்யாவின் தந்தை டாக்டர் புத்தர் கூறுகிறார்.
33 வயதான லாவண்யா முதலில் தனது 7 வயது மகனுக்கு தூக்க மாத்திரைகள் கொடுத்தார், பின்னர் தானும் தூக்க மாத்திரையை சாப்பிட்டார். அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரைகளை அதிகமாக உட்கொண்ட இருவரும் மயக்கமடைந்தனர். அவர்கள் இருவரும் எழுந்திருக்காததால் குடும்ப உறுப்பினர்கள் பார்த்தபோது விஷயம் தெரிந்தது. உடனடியாக தாயும் மகனும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இருவரும் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர்.
கணவன் துன்புறுத்தியதால் தனது மகள் தற்கொலை செய்து கொண்டதாக லாவண்யாவின் தந்தை டாக்டர் புத்தர் கூறினார். தற்போது, போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்