'என்னைக்கும் ராஜா நான்...' விருது வாங்கியே சாதனை படைக்கும் விராட் கோலி - கௌரவிக்கும் ஐசிசி

ICC Men's ODI Cricketer Of The Year 2023: சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் 2023ஆம் ஆண்டுக்கான ஆடவர் அணியின் சிறந்த வீரருக்கான விருதை இன்று விராட் கோலிக்கு அறிவித்துள்ளது. இந்த விருது குறித்த முழுமையான தகவல்களை இதில் காணலாம். 

ICC Awards: டெஸ்ட், ஒருநாள், டி20 என மூன்று பார்மட்டுகளுக்கும் கடந்தாண்டு சிறப்பாக விளையாடிய வீரர்களுக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) விருதுகளை அறிவித்து வருகிறது. அதில், இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி, 2023ஆம் ஆண்டுக்கான சிறந்த ஓடிஐ விரருக்கான விருதை  வென்ருள்ளார்.

 

 

 

1 /7

கடந்த 2023ஆம் ஆண்டுக்கான விருதுகளை ஐசிசி அறிவித்து வருகிறது. அதில், ஒருநாள் கிரிக்கெட் அரங்கின் ஆடவர் அணியில் சிறந்த வீரருக்கான விருதும் இன்று அறிவிக்கப்பட்டது.   

2 /7

இந்த விருதுக்கான பரிந்துரையில் பலர் இருந்தாலும், இந்தியா சார்பில் விராட் கோலி மட்டுமின்றி சுப்மான் கில், முகமது ஷமி ஆகியோரும் போட்டியில் இருந்தனர்.   

3 /7

அந்த வகையில், இந்தாண்டுக்கான ஆடவர் அணியில் சிறந்த ஓடிஐ வீரர் விருதை ஐசிசி விராட் கோலிக்கு இன்று அறிவித்துள்ளது.

4 /7

இந்த விருதை அவர் நான்காவது முறையாக பெறுகிறார். இதற்கு முன் 2012, 2017, 2018 ஆகிய ஆண்டுகளுக்கு பின் தற்போது வென்றுள்ளார். இதிலும், விராட் கோலி புதிய சாதனையை படைத்துள்ளார்.   

5 /7

இந்த விருதை நான்கு முறை முதல்முறையாக வென்றவர் என்ற சாதனையை விராட் கோலி படைத்தார். மேலும், இந்த விருதை ஏ பி டிவில்லியர்ஸ் மூன்று முறை பெற்றிருந்தார். தற்போது அதையும் தாண்டி விராட் கோலி சாதனை படைத்துள்ளார்.   

6 /7

விராட் கோலி இந்தாண்டு சர்வதேச அரங்கில் சிறப்பாக விளையாடியிருந்தார். 36 இன்னிங்ஸில் 2,048 ரன்களை குவித்து அசத்தினார். ஒருநாள் போட்டிகளில் மட்டும் 1,584 ரன்களை விராட் சேர்த்தார்.   

7 /7

கடந்தாண்டு நடைபெற்ற ஒருநாள் போட்டிக்கான உலகக் கோப்பை தொடரிலும் சிறப்பாக விளையாடி, டாப் ஸ்கோரராக விராட் கோலி விளங்கினார். அதற்காக தொடர் நாயகன் விருதையும் விராட் பெற்றார்.