மற்றவர்களின் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸை அவர்களுக்கே தெரியாமல் பார்ப்பது எப்படி?

மற்றவர்களின் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸை அவர்களுக்கே தெரியாமல் பார்க்க விரும்புகிறீர்களா?... அப்போ இதை செய்யுங்கள்..!
  • Nov 30, 2020, 13:48 PM IST

மற்றவர்களின் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸை அவர்களுக்கே தெரியாமல் பார்க்க விரும்புகிறீர்களா?... அப்போ இதை செய்யுங்கள்..!

1 /6

பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஸ்டோரீஸ் போலவே வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் அம்சமும் இருக்கிறது. இந்த வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் 24 மணிநேரம் வரை இருக்கும், மேலும் பேஸ்புக்கிற்குச் சொந்தமான மற்ற இரண்டு தளங்களில் உள்ள ஸ்டோரீஸ் போலவே இதிலும் பல ஸ்டேட்டஸ் புதுப்பிப்புகளையும் நீங்கள் சேர்க்க முடியும்.

2 /6

ஆனால் இன்ஸ்டாகிராமில் நீங்கள் நெருங்கிய நண்பர்களின் குழுவை உருவாக்கி அவர்களுக்கு மட்டும் தெரியும் வகையில் ஸ்டோரீஸைப் பகிர்ந்து கொள்ள முடியும். இன்ஸ்டாகிராமில் உங்களைப் பின்தொடர்பவர்களில் சிலருக்கு ஸ்டோரீஸ் தெரியாமல் மறைக்க முடியும். 

3 /6

ஆனால், வாட்ஸ்அப்பில் அப்படியொரு விருப்பம் இல்லை. வாட்ஸ்அப்பில் நீங்கள் ஒரு ஸ்டேட்டஸ் பதிவிட்டால் அது உங்கள் போனில் உள்ள அனைத்து வாட்ஸ்அப் தொடர்புகளுக்கும் காண்பிக்கும். மற்றொருவர் வாட்ஸ்அப் தொடர்பில்  நீங்கள் இருந்தால், அவர்கள் பதிவிடும் ஸ்டேட்டஸையும் நீங்கள் பார்க்க முடியும். நீங்கள் பார்த்தது பதிவிட்டவருக்கும் தெரிந்துவிடும்.

4 /6

ஆனால், ஒருவர் பதிவிடும் ஸ்டேட்டஸை நீங்கள் பார்த்தாலும் அது  அவர்களுக்கு  தெரியாமல் இருக்க ஒரு ட்ரிக் உள்ளது. அது தான்  Read Receipts எனும் அம்சம்.

5 /6

வாட்ஸ்அப் Settings க்குச் சென்று, ‘Privacy’ என்பதைக் கிளிக் செய்து, Read Receipts அம்சத்தை  ஆஃப் செய்து விடுங்கள்.  இப்போது நீங்கள் ஒருவரின் ஸ்டேட்டஸைப் பார்க்க முடியும். ஆனால் ஸ்டேட்டஸ் பார்த்தவர்களின் பட்டியலில் உங்கள் பெயர் இருக்காது.

6 /6

நீங்கள் Read Receipt அம்சத்தை ஆஃப் செய்துவிட்டால், உங்கள் ஸ்டேட்டஸை யாரெல்லாம் பார்த்தார்கள் என்பதை நீங்களும் பார்க்க முடியாது என்பதையும், சாதாரணமாக  ஒரு செய்தியை பார்த்துவிட்டால் தோன்றும் ப்ளூ டிக் அம்சமும் தோன்றாது என்பதையும் நீங்கள் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.