ஆதார் அப்டேட்... 10 வருடம் முன் வழங்கப்பட்ட ஆதார் செல்லாதா... UIDAI கூறுவது என்ன..!!

பத்தாண்டுகளுக்கு முன்பு வழங்கப்பட்ட ஆதார் அட்டைகள் புதுப்பிக்கப்படாவிட்டால் ஜூன் 14க்குப் பிறகு செல்லாததாகிவிடும் என்று சமூக வலைதளங்களில் செய்தி பரவி வருகிறது. இது குறித்து, இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) அளித்துள்ள விளக்கத்தை அறிந்து கொள்ளலாம்.

ஆதார் அட்டை என்பது மிக முக்கிய அடையாள ஆவணமாக உள்ளது. அரசாங்க திட்டங்கள் மூலம் பலன்களை பெறுவது மட்டுமல்லாமல், பள்ளி சேர்க்கை முதல் வேலையில் சேருவது, வங்கியில் கணக்கு திறப்பது வரை, பல விஷயங்களுக்கு ஆதார் கட்டாய அடையாள ஆவணமாக உள்ளது.

1 /8

ஆதார் அட்டை: இலவச ஆதார் புதுப்பிப்புகளுக்கான காலக்கெடுவை நீட்டிப்பது தொடர்பான அரசாங்கத்தின் அறிவிப்பின் காரணமாக, தவறான தகவல் ஒன்று வைரலாக பரவி வருகிறது.

2 /8

ஆதார் புதுப்பிப்பு மற்றும் செல்லுபடியாகும் தன்மை குறித்த செய்தியில், பத்தாண்டுகளுக்கு முன்பு வழங்கப்பட்ட ஆதார் அட்டைகள் புதுப்பிக்கப்படாவிட்டால் ஜூன் 14க்குப் பிறகு செல்லாததாகிவிடும் என்ற செய்தி மிக வேகமாக பரவி வருகிறது

3 /8

ஆதார் அட்டை குறித்து பரவும் வைரல் செய்தி குறித்து தெளிவுபடுத்திய UIDAI, பத்து ஆண்டுகளுக்கு முன் வழங்கப்பட்ட ஆதார் அட்டைகள் புதுப்பிக்கப்படாவிட்டாலும் அவை செல்லுபடியாகும் என உறுதிப்படுத்தியுள்ளது.

4 /8

இலவச அப்டேட்: ஆதார் அட்டையில் உள்ள தகவல்களை இலவசமாக அப்டேட் செய்வதற்கான காலக்கெடு தொடக்கத்தில், மார்ச் 14 என்று காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டது, ஆனால், பின்னர் அது ஜூன் 14, 2024 வரை நீட்டிக்கப்பட்டது.

5 /8

ஆதார் அட்டை: ஆதார் அட்டை தகவலைப் புதுப்பிக்க நீங்கள் myAadhaar போர்ட்டலில் சில ஆவணங்களை பதிவேற்ற வேண்டும். நீங்கள் அப்டேட் செய்ய உள்ள தகவலை பொறுத்து, அதற்கு ஏற்ற ஆவணங்களை பதிவேற்ற வேண்டும்.

6 /8

இதில், பாஸ்போர்ட் என்னும் கடவுச்சீட்டு,  ஓட்டுனர் உரிமம், பான் கார்டு,  வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட பல ஆவணங்கள் அடங்கும். முகவரியை மாற்ற வேண்டும் என்றால், மின்சாரம் அல்லது எரிவாயு இணைப்புக் கட்டணங்கள், ரேஷன் கார்டு,  கடந்த ஆண்டில் வழங்கப்பட்ட சொத்து வரி ரசீதுகள் ஆகியவை தேவை.

7 /8

ஆன்லைனில் ஆதார் அட்டை புதுப்பித்தல்: https://ssup.uidai.gov.in/ssup/ என்னுன் UIDAI போர்ட்டலில் லாக் இன் செய்து தனிப்பட்ட 12 இலக்க ஆதார் எண்ணை வழங்கவும். பின்னர் உங்கள் ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் ஒரு முறை கடவுச்சொல்லைப் பெற, ‘Send OTP’ என்பதைக் கிளிக் செய்யவும்.

8 /8

OTP: பெறப்பட்ட OTP ஐ உள்ளிட்டு தொடரவும். அதில்,  'Update Aadhaar Online' என்பதைத் தேர்ந்தெடுத்து,அதில்  மாற்றங்களைச் செய்ய தேவையான ஆவணங்களைப் பதிவேற்ற வேண்டும். இதன் பின்னர் உங்கள் ஆதார் விபரங்கள் அப்டேட் செய்யப்படும்.