Double Chin Workouts Yoga Asanas : நம்மில் பலருக்கு முகத்தில் தசை அதிகமாக இருக்கும். இதை குறைக்க சில உடற்பயிற்சிகளும் யோகாசனங்களும் இருக்கின்றன. அவை என்னென்ன தெரியுமா?
Double Chin Workouts Yoga Asanas : உடல் பருமனுடன் இருப்பவர்களுக்கு மட்டுமன்றி, பொதுவாக பலருக்கு முகத்தில் அதிக தசைகள் இருக்கும். இதனால் சிரிக்கும் போது, தலையை சாய்க்கும் போது என முகத்தில் எதை செய்தாலும் அந்த அதிக தசைகள் ஒரு பிரச்சனையாக இருக்கும். இதை, முகத்தில் இருக்கும் கொழுப்பு தசைகள் என்றும் குறிப்பிடுவர். இதை குறைக்க சில யோகாசனங்கள் இருக்கின்றன. அவை என்னென்ன தெரியுமா?
Face Fat: பெரும்பாலானோருக்கு முகத்திலும், தாடை பகுதியிலும் அதிக தசைகள் இருக்கும். இதை குறைக்க சில உடற்பயிற்சிகள் இருக்கின்றன. அவை என்னென்ன தெரியுமா?
புஜங்காசனம்: இது, சூர்ய நமஸ்கார யோகாசனங்களுள் ஒன்றாகும். இதனை ஆங்கிலத்தில் கோப்ரா போஸ் என்றும் கூறுவர். தரையில் குப்புற படுத்துக்கொண்டு இந்த ஆசனத்தை செய்ய வேண்டும்.
உஸ்த்ராசனம்: இது, முகத்தின் தாடை பகுதிக்கும், உடலை நீட்டி மடக்கும் ஸ்ட்ரெட்சிங் உடற்பயிற்சியாகவும் உதவும். இதனை ஆங்கிலத்தில் camel pose என குறிப்பிடுவர்.
சிம்ம முத்ரா: சிங்கத்தை போல பெரிதாக வாயை திறக்க வேண்டும் என்பதற்காக இந்த யோகாசனத்தை இப்படி குறிப்பிடுகின்றனர். >உங்கள் வாயை எவ்வளவு முடியுமோ அவ்வளவு பெரிதாக திறக்க வேண்டும். >உங்கள் தாடையை மார்பகத்திற்கு நேராக கொண்டு வர வேண்டும். கண்களை திறந்து கொள்ள வேண்டும். >நாக்கை வெளியே தள்ளி சிங்கம் போல கர்ஜனை செய்ய வேண்டும். >சில விநாடிகள் அல்லது நிமிடங்களுக்கு பிறகு சாதாரண நிலைக்கு திரும்பலாம்.
பவுட் போஸ்: உதட்டை குமித்து செய்யும் வாய்க்கான பயிற்சி இது. >உங்கள் உதடுகளை ஒன்றாக குமித்து வைத்து கொள்ள வேண்டும் (படத்தில் உள்ளது போல) >உங்கள் கண்கள் அகல விரிந்திருக்க வேண்டும்.
நெக் ஸ்ட்ரெட்ச்: கழுத்து, தாடை, முகம் ஆகிய பகுதிகளை குறைக்க உதவும் உடற்பயிற்சிகளுள் ஒன்று, நெக் ஸ்ட்ரெட்ச். எப்படி செய்வது? >உங்கள் முகத்தை வலது பக்கமாக சாய்க்கவும். >அப்படியே மெதுவாக தலையை சாய்த்து இடது பக்க தோள்பட்டைக்கு திருப்பவும் >இப்படி இரு முறையும் செய்யவும்.
மச்சாசனம்: முகத்தில் இருக்கும் அதிக தசையை குறைக்க உதவும் ஆசனங்களுள், இதுவும் ஒன்று. இதை தரையில் படுத்துக்கொண்டு செய்ய வேண்டும்.
ஜீவ்ஹ பந்தா: இந்த ஆசனத்தை நாக்கை வைத்து செய்ய வேண்டும். >உங்கள் நாக்கை மேல்வாயில் படும் படி வைக்க வேண்டும். >உங்கள் வாயை அகலமாக திறக்க வேண்டும், அப்படியே தலையை மேலே தூக்க வேண்டும். >முடிக்கும் போது, கண்களை சில நிமிடம் மூடி, சாதாரண நிலைக்கு வரவும். (பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)