Weight Loss Tips: உடல் எடையை குறைப்பது சாதாரண விஷயமல்ல. உடல் எடையை குறைக்க நாம் பல வித முயற்சிகளை எடுக்கிறோம். உடற்பயிற்சிகள், உணவு கட்டுப்பாடுகள் என நாம் பலவற்றை செய்து பார்க்கிறோம்.
சில எளிய, சுவாரசியமான வழிகளிலும் தொப்பை கொழுப்பை (Belly Fat) குறைத்து உடல் எடையை குறைக்க முடியும். அப்படி ஒரு வழிதான் நடைப்பயிற்சி. உடல் எடையை குறைக்க பல வகையான பயிற்சிகள் உள்ளன. ஆனால் நடைபயிற்சி மிகவும் எளிதான மற்றும் பயனுள்ள பயிற்சிகளில் ஒன்றாகும். நடைப்பயிற்சி (Walking) மூலம் உடல் எடையை எப்படி குறைப்பது என இந்த பதிவில் காணலாம்.
உடல் எடையை குறைப்பது இன்றைய காலகட்டத்தில் ஒரு சவாலான பணியாக உள்ளது. மிக எளிதாக, வேகமாக அதிகரிக்கும் எடை, குறைய அதிக நேரத்தை எடுத்துக்கொள்கிறது. உடல் பருமனால் பல வித நோய்களும் நம்மை ஆட்கொள்கின்றன.
உடல் எடையை குறைக்க பல வழிகள் உள்ளன. அதில் ஒரு எளிய சுவாரசியமான வழிதான் நடைப்பயிற்சி. நடைபயிற்சி குறைந்த தீவிரம் கொண்ட, அனைவரும் செய்யக்கூடிய ஒரு உடற்பயிற்சியாக பார்க்கப்படுகின்றது. அதாவது இதற்கு ஜிம் சேர தேவையில்லை. இது உங்கள் மூட்டுகளில் அதிக அழுத்தத்தை ஏற்படுத்தாது. இது ஒரு கார்டியோ உடற்பயிற்சி. இது உங்கள் இதயம் மற்றும் நுரையீரலை வலுப்படுத்த உதவுகிறது.
உடற்பயிற்சி செய்யத்துவங்கினால், அதை தினமும் இடைவெளி விடாமல் செய்வது முக்கியம். பிற உடற்பயிற்சிகளை பெரும்பாலான மக்களால் தினமும் தோடர்ந்து செய்ய முடிவதில்லை. அப்படிப்பட்டவர்களுக்கு நடைப்பயிற்சி மிக உதவியாக இருக்கும். இதற்கு சிறப்பு உபகரணங்கள் தேவை இல்லை, குறிப்பிடத்தக்க நேரக் கட்டமைப்புகள் இல்லை. நடைபயிற்சிக்கு, வசதியான ஒரு ஜோடி காலணிகள் மட்டுமே தேவை. இதை நமது அன்றாட வாழ்க்க்கைமுறையில் எளிதாக சேர்க்க முடியும்.
வயது அல்லது உடற்தகுதியைப் பற்றி கவலைப்படாமல், இதை கிட்டத்தட்ட அனைவரும் செய்ய முடியும். சில உடல் நிலைகளைக் கொண்டவரளுக்கு சில உடற்பயிற்சிகளை செய்ய முடியாது. ஆனால் நடைப்பயிற்சியை அனைவரும் எளிதில் செய்யலாம். இதை செய்வதால் எந்த வித பிரச்சனயும் ஏற்படாது.
அதிக தீவிரம் கொண்ட உடற்பயிற்சிகளுடன் ஒப்பிடும்போது நடைபயிற்சி லேசானதாகத் தோன்றினாலும், இது கொழுப்பை எரிக்க மிகச்சிறந்த வழியாக பார்க்கப்படுகின்றது. விறுவிறுப்பான நடைப்பயிற்சியை செய்யும்போது, அது இதயத் துடிப்பை அதிகரிக்கிறது, கலோரிகளை எரிக்க உடலைத் தூண்டுகிறது. தினமும் நடைப்பயிற்சி செய்பவர்கள் சில நாட்களிலேயே உடல் எடையை எளிதாக குறைத்து விடலாம்.
உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, நடைபயிற்சி, மன ஆரோக்கியத்தயும் மேம்படுத்துகின்றது. நடைப்பயிற்சி ஆரோக்கியமான விதத்தில் எடையை குறைப்பதிலும், அதை பராமரிப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் தினமும் வாக்கிங் செய்வதால், மன அழுத்தம் மற்றும் பதட்டம் குறைகிறது. மேலும், நடக்கும் போது, 'ஃபீல் குட்' ஹார்மோன் எனப்படும் எண்டோர்பின்கள் வெளியிடப்படுகின்றன. இது நேர்மறையான மனநிலை மற்றும் மன தெளிவை ஊக்குவிக்கிறது.
மூட்டு வலி (Knee Pain) பிரச்சினை உள்ளவர்கள் தினமும் நடைபயிற்சி செய்யலாம். இது பாதுகாப்பான வழியில் மூட்டுகளின் அசைவையும் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகின்றது. கீல்வாதம் அல்லது மூட்டு வலி போன்ற பிரச்சனைகள் உள்ள நோயாளிகளுக்கு நடைபயிற்சி ஏற்றது.
இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.