Weight Loss Tips : உடல் எடையை குறைக்க, நாம் தினசரி பல்வேறு பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. அதில் குறிப்பாக நாம் 5 உணவுகளை நமது டயட்டில் சேர்த்துக்கொண்டால் கண்டிப்பாக உடல் எடையை குறைக்கலாம். அவை என்னென்ன உடற்பயிற்சிகள் தெரியுமா?
Weight Loss Tips : உடல் எடை அதிகமாக இருப்பது, எந்த வகையிலும் எந்த விதத்திலும் தவறான விஷயமல்ல. உடல் பருமனுடன் இருப்பதால் பல சமயங்களில் நமக்கே தெரியாமல் பல்வேறு உடல் நலக்கோளாறுகள் வந்து சேறும். இதனால், நம் வாழ்நாளில் பாதி நாட்களை மருத்துவமனையிலும் மருந்துகளிலும் கழிக்க வேண்டிய நிலை வரலாம். உடல் எடை அதிகரிப்பிற்கு எத்தனையோ காரணங்கள் இருப்பது போல, அதை குறைப்பதற்கும் நிறைய வழிகள் இருக்கின்றன. அதில் ஒன்றுதான் ஹெல்தியாக சாப்பிடுவது. உடலில் உள்ள கொழுப்பு கரைய, என்னென்ன உணவுகளை சாப்பிட வேண்டும்? இங்கு பார்ப்போம்.
உடல் எடை பராமறிப்பு என்பது அனைவரும் மிக முக்கியமாக கண்காணிக்க வேண்டிய ஒன்றாகும். அதிக உடல் எடையுடன் இருந்தால், நாம் மந்தமாக உணரும் தருணங்கள் ஏற்படலாம் என்கின்றனர் மருத்துவர்கள்.
உடல் எடை அதிகமாக இருப்பதால் சுகர் லெவல் அதிகரிப்பு, தைராய்டு பிரச்சனை போன்ற பல பிரச்சனை ஏற்படும். இதை, ஹெல்தியான உணவு முறைகளை வைத்து குறைக்க முடியும். அவை என்னென்ன உணவுகள் தெரியுமா?
முட்டை: முட்டையில், உடலுக்கு தேவையான பல அத்தியாவசிய ஊட்டச்சத்துகள் இருக்கின்றன. முக்கியமாக புரதம், குறைந்த கொழுப்பு ஆகியவை இருப்பதால் இது எடை இழப்பில் நல்ல பங்கு வகிக்கிறது. மஞ்சள் கருவை விட்டுவிட்டு, வெள்ளைக்கருவை மட்டும் நாம் உட்கொண்டால் உடலுக்கு தேவையான சத்துகள் அதிலிருந்து கிடைக்கும் என கூறப்படுகிறது.
க்ரீக் தயிர்: க்ரீக் தயிர், ஒரு புரோபயாடிக் உணவாகும். இந்த உணவு, குடலை ஆரோக்கியமகா வைக்கவும், புரதத்தை உடலில் செலுத்தவும் உதவுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
பீன்ஸ் மற்றும் பருப்பு: பீன்ஸ் மற்றும் பருப்பு ஆகிய இரண்டு தாவரங்களிலுமே புரதச்சத்து நிறைந்திருக்கின்றன. இதை காய்கறி கூட்டாக செய்து சாப்பிட்டால் உடலுக்கு வலு சேர்க்கும். இரண்டிலும் நார்ச்சத்து நிறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பச்சை பட்டாணி : பச்சைப்பட்டாணியில், நார்ச்சத்து மட்டுமல்ல புரதச்சத்தும் நிறைந்திருக்கிறது. உடலுக்கு வலு சேர்க்கும் அத்தியாவசிய சத்துகளை இது நிறைவாக அளிக்கவல்லது என சில மருத்துவ அறிக்கைகள் கூறுகின்றன.
மீன் மற்றும் கீரை: கடல் உணவுகளுள் ஒன்றான மீன், மனிதர்களின் கண் பார்வைக்கும், வைட்டமின் டி மற்றும் பி2 சத்துகளை உடலில் செலுத்தவும் உதவுகிறது. இதனுடன் கீரையையும் சேர்த்து சாப்பிட்டால் டபுள் தமாக்காதான்! உடல் எடையை குறைக்க, இதை உங்கள் டயட் உணவு பட்டியலில் சேர்த்துக்கொள்ளுங்கள்.