Cholesterol Control Tips: கொலஸ்ட்ராலை பலர் சாதாரணமாக எடுத்துக்கொள்கிறோம். ஆனால், இது மிக ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். நரம்புகளில் கொலஸ்ட்ரால் படிவது பல பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
Cholesterol Control Tips: நரம்புகளின் அடைப்பு ஏற்பட்டால், அதன் காரணமாக, மாரடைப்பு, பக்கவாதம் ஆகியவை ஏற்படுகின்றன. அதிக கொலஸ்ட்ரால் இருப்பவர்களுக்கு இதய நோய்கள் ஏற்படும் அபாயமும் உள்ளது. இதைத் தவிர்க்க, கொலஸ்ட்ராலை குறைக்க மருந்துகளுடன் சில வீட்டு வைத்தியங்களையும் பயன்படுத்தலாம். இந்த வீட்டு வைத்தியங்களில் கற்றாழையின் பயன்பாடும் ஒன்று. கற்றாழையை பல நோய்களுக்கு வீட்டு வைத்தியமாக பயன்படுத்தலாம். கற்றாழை தோல் மற்றும் நரம்புகளில் தேங்கியுள்ள கெட்ட கொலஸ்ட்ராலை உலர்த்தி வெளியேற்றுகிறது. இது கொலஸ்ட்ரால் உருவாவதையும் தடுக்கிறது.
இன்றைய அவசர காலகட்டத்தில், இந்தியா உட்பட உலக நாடுகளில் இதய நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. வயதானவர்கள் முதல் இளைஞர்கள் வரை மாரடைப்புக்கு பலியாவதை காண்கிறோம். மாரடைப்பு காரணமாக உயிரிழப்பவர்களின் எண்ணிகை நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. இதற்குப் பின்னால் இருக்கும் முக்கிய காரணங்களில் ஒன்று நரம்புகளில் படிந்துள்ள கெட்ட கொலஸ்ட்ரால்.
கொலஸ்ட்ராலை பலர் சாதாரணமாக எடுத்துக்கொள்கிறோம். ஆனால், இது மிக ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். நரம்புகளில் கொலஸ்ட்ரால் படிவது பல பிரச்சனைகளை ஏற்படுத்தும். இதற்கு என்ன காரணம்? ஆரோக்கியமற்ற உணவு மற்றும் வாழ்க்கை முறை காரணமாக இது நடக்கலாம். நரம்புகளில் உள்ள அழுக்கு கொழுப்பில் ஒட்டிக்கொள்கிறது. நரம்புகளை மெதுவாக நிரப்பி, இது இரத்த நாளங்களைத் தடுக்கிறது.
நரம்புகளின் அடைப்பு ஏற்பட்டால், அதன் காரணமாக, மாரடைப்பு, பக்கவாதம் ஆகியவை ஏற்படுகின்றன. அதிக கொலஸ்ட்ரால் இருப்பவர்களுக்கு இதய நோய்கள் ஏற்படும் அபாயமும் உள்ளது. இதைத் தவிர்க்க, கொலஸ்ட்ராலை குறைக்க மருந்துகளுடன் சில வீட்டு வைத்தியங்களையும் பயன்படுத்தலாம்.
இந்த வீட்டு வைத்தியங்களில் கற்றாழையின் பயன்பாடும் ஒன்று. கற்றாழையை பல நோய்களுக்கு வீட்டு வைத்தியமாக பயன்படுத்தலாம். கற்றாழை தோல் மற்றும் நரம்புகளில் தேங்கியுள்ள கெட்ட கொலஸ்ட்ராலை உலர்த்தி வெளியேற்றுகிறது. இது கொலஸ்ட்ரால் உருவாவதையும் தடுக்கிறது.
கற்றாழை நரம்புகள் முதல் இதயம் வரை அனைத்தையும் பாதுகாப்பாக வைக்க உதவுகின்றது. அதிக கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளவர்கள் கற்றாழை மூலம் நிவாரணம் பெறலாம். கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த கற்றாழையை எப்படி பயன்படுத்துவது என்பது பற்றி இந்த பதிவில் காணலாம்.
கற்றாழை கெட்ட கொழுப்பைக் குறைக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. கெட்ட கொலஸ்ட்ராலை அதிகரிக்கும் பொருட்களை உடலில் இருந்து நீக்குகிறது. இதனுடன், கற்றாழை ஜெல் கெட்ட கொலஸ்ட்ரால் மற்றும் ட்ரைகிளிசரைடுகளையும் குறைக்கிறது.
கற்றாழையில் நார்ச்சத்து உட்பட பல வித ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இது நரம்புகளையும் இதயத்தையும் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகின்றது. கற்றாழையில் உள்ள சத்துக்கள் உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகமாகாமல் தடுக்கின்றன. கற்றாழை இரத்தத்தை மெலிதாக்கி, நரம்புகளில் உள்ள அடைப்பைத் திறந்து, இரத்தம் உறைவதைத் தடுக்கிறது. இது நரம்புகளை மென்மையாக்கி HDL ஐ அதிகரிக்கிறது.
கற்றாழை பொதுவாக கசப்பான சுவையுடன் இருக்கும். தினமும் கற்றாழை சாறு குடிப்பது நன்மை பயக்கும். தினமும் 2 முதல் 3 ஸ்பூன் சாறு குடிப்பது உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது. காலையில் வெறும் வயிற்றில் இதை குடிக்கலாம். கொலஸ்ட்ராலுடன் இது உடல் எடை மற்றும் இரத்த சர்க்கரை அளவை குறைக்கவும் உதவுகிறது.
பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.