வீட்டில் எவ்வளவு பணத்தை வைத்திருக்க முடியும்? விதியை மீறினால் 137% அபராதம்!! உஷார்!!

Cash Limit At Home: வீட்டில் பணத்தை வைத்திருப்பதற்கு வரம்பு உள்ளதா? வீட்டில் ரொக்கமாக எவ்வளவு பணம் வைத்திருக்க அனுமதி உண்டு? 

 

வேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் யுகத்தில், மக்கள் பணத்தை வீட்டில் வைத்திருப்பது குறைத்துள்ளது. எனினும் இன்னும் சிலர் வீட்டில் ரொக்கமாக அதிக பணம் வைத்துள்ளனர். ஒரு வீட்டில் எவ்வளவு பணம் வைத்திருக்கலாம் என்பதில் வரம்புகள் உள்ளதா? இது பற்றி இந்த பதிவில் காணலாம். 

 

1 /8

முந்தைய காலங்களில் அவசர செலவுகள் மற்றும் அன்றாட செலவுகளுக்கான மக்கள் அவரவர் வசதிக்கு ஏற்ப வீட்டில் ரொக்கமாக ஒரு குறிப்பிட்ட அளவு பணத்தை வைத்திருப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.   

2 /8

இன்றைய டிஜிட்டல் யுகத்தில் வீட்டில் வைக்கப்படும் பணத்தின் அளவு குறைந்துள்ளது. ஆனால் ஒருவர் தனது வீட்டில் எவ்வளவு பணம் வைத்திருக்கலாம் என்பதில் வரம்புகள் உள்ளதா?

3 /8

வீட்டில் எவ்வளவு பணம் வைத்திருக்க முடியும்? அதிக பணத்தை வைத்திருந்தால் எவ்வளவு அபராதம் விதிக்கப்படும்? இதுபோன்ற பல கேள்விகள் உங்கள் மனதிலும் இருக்கலாம். ஆனால் வீட்டில் பணத்தை வைத்திருப்பதன் வரம்பு பற்றி பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

4 /8

வருமான வரி விதிகளின்படி, ஒருவர் தனது வீட்டில் பணத்தை வைத்திருக்க அனுமதி உண்டு. ஒருவரிடம் ஒரே நேரத்தில் எவளவு பணம் வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் உங்கள் பணம் விசாரணை நிறுவனத்தால் பிடிக்கப்பட்டால், உங்கள் வருமானம் அல்லது அந்தப் பணத்தின் மூலத்தை நீங்கள் அளிக்க வேண்டும்.

5 /8

உங்களிடம் உள்ள பணத்தின் முழுமையான ஆதாரத்தை நீங்கள் அறிந்திருப்பது நல்லது. மேலும் உங்கள் வருமானத்திற்கான முழுமையான ஆதாரமும் தெரிந்திருக்க வேண்டும். இதைச் செய்ய, உங்களிடம் முழுமையான ஆவணங்கள் இருக்க வேண்டும், தேவைப்பட்டால் அவற்றை நீங்கள் காண்பிக்கலாம். 

6 /8

ஒவ்வொரு ஆண்டும் வருமான வரிக் கணக்கை (ITR) தாக்கல் செய்தால், நீங்கள் கவலைப்படத் தேவையில்லை. ஆனால் பணம் உங்கள் ஐடிஆர் படி மட்டுமே இருக்க வேண்டும். உங்கள் ஐடிஆர் ஆண்டுக்கு ரூ. 5 லட்சம் என காட்டி உங்களிடம் ரூ. 50 லட்சம் ரொக்கம் இருந்தால் அது பிரச்சனைகளை உண்டாக்கும். 

7 /8

சோதனையின் போது வருமான வரித்துறை அதிகாரிகளிடம் பணக் கணக்கை கொடுக்க முடியவில்லை என்றால், பிரச்சனைகள் அதிகரிக்கலாம். வருமான வரித் துறை சோதனைகளின் போது உங்கள் வருமானம் குறித்த உறுதியான தகவலை வழங்க வேண்டும். 

8 /8

உங்களிடம் சரியான தகவல்கள் இருந்தால், நீங்கள் எந்த விதமான அபராதமும் செலுத்த வேண்டியதில்லை. ஆனால் உங்களால் தகவலை வழங்க முடியாவிட்டால், நீங்கள் பெற்ற பணத்தின் மீது 137% வரை வரி விதிக்கப்படலாம். அதாவது பணத்துடன் சேர்த்து 137 சதவீதம் கூடுதல் வரி செலுத்த வேண்டும்.