சண்டை போடுவதையே முழுநேர வேலையா வைத்திருக்கும் அசீம்! ஹிட் அடிப்பது எப்படி?

பிக்பாஸில் சண்டைபோடுவதையே முழுநேர வேலையாக வைத்து ஹிட்டாகியிருக்கிறார் அசீம்.

 

1 /5

பிக்பாஸ் சீசன் 6 தமிழ் இறுதிக் கட்டத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது. இதில் அசீம் மற்றும் விக்ரமன் இருவரும் எலியும் பூனையுமாக இருக்கின்றனர்.

2 /5

விக்ரமன் அமைதியாக சென்றாலும், வேறொருவருடன் சண்டை இழுப்பதை வாடிக்கையாக வைத்திருக்கிறார் அசீம்.  

3 /5

பிக்பாஸ் வீட்டில் அவர் சண்டை போடாத ஆளே இல்லை எனலாம். அந்தளவுக்கு மல்லுக்கட்டி கொண்டிருக்கிறார். கத்தி பேசுவது, மிரட்டுவது என இருக்கும் அவரின் விளையாட்டையும் ரசிகர்கள் ரசிக்கின்றனர்.  

4 /5

என்ன தான் அவர் சண்டைபோட்டாலும் வாரவாரம் எலிமினேஷனில் இருந்து தப்பித்துவிடுகிறார். இது ஹவுஸ்மேட்ஸூக்கு புரியாத புதிராக இருக்கிறது. 

5 /5

இது அவருடைய கேம் பிளான்களில் ஒன்றாகவும் உள்ளது. ஆசீமின் செயல்பாட்டை விமர்சிப்பவர்கள் பலர் இருந்தாலும், அவர் நன்றாக விளையாடுவதாக சர்டிபிகேட் கொடுப்பதற்கும் ஒரு கூட்டம் இருக்கிறது. அதனால் தான் அவர் இன்னும் பிக்பாஸ் வீட்டில் தாக்குப்பிடித்துக் கொண்டிருப்பதாக நெட்டிசன்கள் கூறியுள்ளனர்.