நோய்நொடிகளுக்கு எதிரியாகும் பழங்கள்! புரதச்சத்து உள்ள பழங்கள்

புரதம் உள்ள உணவுகளைப் பற்றி நினைத்தால், அதில் பொதுவாக பழங்கள் வராது. ஆனால், பழங்களிலும் புரதச்சத்து உள்ளது என்பது உங்களுக்குத் தெரியுமா?

 

 

1 /10

நார்ச் சத்து, நீர்ச்சத்து, வைட்டமின் சி என பல சத்துக்கள் நிரம்பிய பழங்கள், பைடோ கெமிக்கல்ஸ் நிரம்பியவை. இதனால் பழங்களைச் சாப்பிடுவதால் நோய் வராமல் தடுக்க முடியும்

2 /10

கொய்யா பழங்களில் புரதம் அதிகம் உள்ள பழங்களில் ஒன்று. இந்த வெப்பமண்டல பழத்திலும் வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளது. கொய்யாவில் உள்ள விதைகள் மற்றும் தோலையும் சாப்பிடலாம்

3 /10

ஆரோக்கியமான கொழுப்பு, நார்ச்சத்து மற்றும் பொட்டாசியம் ஆகியவை கொண்ட அவகேடோ உடலுக்கு மிகவும் நல்லது 

4 /10

பலா, முக்கனிகளில் ஒன்று, இதை பழமாகவும் சாப்பிடலாம், காயாகவும் சமைத்து சாப்பிடலாம். இதில் புரதம் அதிகமாக உள்ளது.  

5 /10

கிவியில் புரதச்சத்து இருக்கிறது. கிவியை அப்படியே சாப்பிடலாம், தோலோடும் சாப்பிடலாம்.  

6 /10

அப்ரிகாட் பழத்தில் புரதச்சத்து அதிகம் உள்ளது

7 /10

வாழைப்பழங்களில் பொட்டாசியம் அதிகமாக உள்ளது, பயணத்தின்போது சாப்பிட வசதியாக உள்ளது. ஒரு நடுத்தர அளவு வாழைப்பழத்தில் 1.3 கிராம் புரதம் உள்ளது.

8 /10

ஆரஞ்சின் குடும்பத்தை சேர்ந்த பல்வேறு பழங்களிலும் புரதச்சத்து அதிக அளவில் உள்ளது

9 /10

வைட்டமின் சி இன் மற்றொரு சிறந்த ஆதாரமான ஆரஞ்சு பழத்தை சாறாக மட்டுமல்ல, அப்படியேவும் சாப்பிடலாம்  

10 /10

ஆழமான சிவப்பு நிறத்தில் மட்டுமல்ல, செர்ரிப் பழங்களில் புரதம் உள்ளது.