எகிறும் உடல் எடையை பட்டுனு குறைக்க... டாப்பான ஒல்லி பெல்லி டிப்ஸ் இதோ

Weight Loss Tips: ஆரோக்கியமற்ற உணவுகள், ஹார்மோன் சமநிலையற்ற தன்மை ஆகியவை தொப்பை கொழுப்பு அதிகமாக முக்கியமான காரணங்களாக பார்க்கப்படுகின்றன. 

Weight Loss Tips: உடல் எடை அதிகரிப்பதால், நாம் நமது அன்றாட பணிகளை செய்வதில் சிரமம் ஏற்படுவதுடன் இன்னும் பல்வேறு உடல்நல பிரச்சனைளும் நம் உடலை பற்றிகொள்கின்றன. உடல் எடை வேகமாக அதிகரித்து விடுகின்றது. ஆனால், அதை குறைப்பது மிக கடினம். பலர் உடல் எடையை குறைக்க ஜிம் செல்கிறார்கள், கடுமையான உணவு கட்டுப்பாடுகளை மேற்கொள்கிறார்கள். எனினும் சில இயற்கையான எளிய வழிகளிலும் உடல் எடையை குறைக்கலாம். உடல் எடையை குறைக்க நாம் தினசரி நினைவில் கொண்டு செயல்படுத்த வேண்ண்டிய சில முக்கிய குறிப்புகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.

1 /10

உடல் பருமன் கடந்த சில ஆண்டுகளில் பலரை பாடாய் படுத்தும் ஒரு தீவிர உடல் நிலையாக மாறி வருகின்றது. உடல் எடை வேகமாக அதிகரித்து விடுகின்றது. ஆனால் அதைக் குறைப்பது பிரம்ம பிரயத்னமாகவே உள்ளது. அதுவும் தொப்பை பகுதியில் கொப்பு சேர்ந்து விட்டால் அதை குறைப்பது மிகவும் கடினமாகும்.

2 /10

ஆரோக்கியமற்ற உணவுகள், ஹார்மோன் சமநிலையற்ற தன்மை ஆகியவை தொப்பை கொழுப்பு அதிகமாக முக்கியமான காரணங்களாக பார்க்கப்படுகின்றன. இவற்றை நாம் சரி செய்தால் தொப்பை கொழுப்பையும் (Belly Fat) கட்டுக்குள் கொண்டு வரலாம்.

3 /10

பலர் உடல் எடையை குறைக்க ஜிம் செல்கிறார்கள், கடுமையான உணவு கட்டுப்பாடுகளை மேற்கொள்கிறார்கள். எனினும் சில இயற்கையான எளிய வழிகளிலும் உடல் எடையை குறைக்கலாம். உடல் எடையை குறைக்க நாம் தினசரி நினைவில் கொண்டு செயல்படுத்த வேண்ண்டிய சில முக்கிய குறிப்புகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.

4 /10

காலை உணவு: காலை உணவில் அதிக கொழுப்புள்ள, எண்ணெய் அதிகமாக உள்ள உணவுகளை தவிர்க்க வெண்டும். அதிக புரதச்சத்து உள்ள உணவுகள், காய்கள், பழங்கள், முட்டை, தயிர், ஓட்ஸ் ஆகிய உணவுகளை உட்கொள்வது உடல் எடையை குறைப்பதோடு, நாள் முழுதும் உடலை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கவும் உதவும்.

5 /10

காலை உணவு, மதிய உணவு மற்றும் இரவு உணவில் சமச்சீரான உணவை எட்கொள்ள வேண்டும். உங்கள் உணவில் 30 சதவீதம் புரதச்சத்து இருக்க வேண்டும். வைட்டமின்கள், இரும்புச்சத்து, நார்ச்சத்து, புரதச்சத்து நிரம்பிய சமச்சீர் உணவை உட்கொள்ள வேண்டும்.

6 /10

நம்மில் பலர் காய்கறிகள் நிறைந்த சாலடை உட்கொள்கிறோம். ஆனால் இதை சரியான நேரத்தில் உட்கொள்ள வேண்டும். சாப்பாட்டிற்கு குறைந்தது ஒரு மணி நேரம் முன்னதாக காய்கறி சாலட் சாப்பிடலாம். இப்படி சாப்பிடுவதால் இன்சுலின் அளவு வேகமாக உயராமல் இருப்பதோடு தொப்பை கொழுப்பும் அதிகரிக்காது.

7 /10

இரவில் போதுமான அளவு தூங்குவது மிகவும் அவசியமாகும். அனைவரும் தினமும் 7-8 மணி நேரம் கண்டிப்பாக தூங்க வேண்டும். போதுமான அளவு தினமும் தூங்கினால் ஹார்மோன் சமநிலையும் சரியான அளவில் இருக்கும்.

8 /10

அடிக்கடி வயிற்று பிரச்சனைகள் ஏற்பட்டாலோ, வயிறு உப்பசம், வாந்தி சங்கடம், வாயுத்தொல்லை போன்ற பிரச்சினைகள் இருந்தாலோ உடனடியாக மருத்துவரை  காண்பது நல்லது. செரிமானம் சீராக இல்லாமல் போனால் தொப்பை கொழுப்பு அதிகமாகும்.

9 /10

உடல் செயல்பாடுகள் மிக அவசியம். குறைந்தது 30 மணி நேரம் ஆவது உடற்பயிற்சி, யோகா, ஓட்டப்பயிற்சி, நடைப்பயிற்சி ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை செய்ய வேண்டும். இதன் மூலம் தொப்பை கொழுப்பை வேகமாக குறைப்பதோடு உடல் எடையையும் குறைக்கலாம்.

10 /10

பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.