Things Women Should Know Before Turning 32 : பெண்கள் அனைவருமே, தங்களின் வாழ்வில் பல விஷயங்களை கற்றுக்கொண்டே இருப்பது அவசியம் ஆகும். 32 வயதிற்குள் அவர்கள் என்னென்ன கற்றிருக்க வேண்டும் தெரியுமா?
Things Women Should Know Before Turning 32 : 20களை கடந்து, 30களை தொடுகையில், நமக்குள் நமக்கே தெரியாமல் இனம் புரியாத பயம் ஆட்கொண்டுவிடும். “வாழ்வில் நமக்கு பிடித்த விஷயங்களைதான் செய்து வருகிறோமா? நம் வாழ்க்கை எதை நோக்கி போய்க்கொண்டிருக்கிறது?” போன்ற கேள்விகள் எழுந்து கொண்டே இருக்கும். இதை தவிர்க்க வேண்டும் என்றால், உங்களின் 32 வயதிற்குள் நீங்கள் சில விஷயங்களை கற்றுக்கொண்டே ஆக வேண்டும். அவை என்னென்ன தெரியுமா?
உங்கள் வாழ்வில் உங்களுக்கு எது மிகவும் முக்கியம் என்பதையும், நீங்கள் எதை அடைய விரும்புகிறீர்கள் என்பதையும் அடிக்கடி நினைவு படுத்திக்கொண்டே இருக்க வேண்டும். உங்களின் தினசரி நடவடிக்கைகள் அதற்கு ஏற்றார் போல அமைந்திருக்கிறதா என்பதையும் கவனிக்க வேண்டும். அப்போதுதான் உங்களால் உங்கள் வாழ்க்கையை கண்ட்ரோல் செய்ய முடியும்.
கற்றல்: "கற்றது கைமண் அளவு கல்லாதது உலகளவு" என்ற அவ்வையின் சொல்லுக்கு இணங்க, புதிய திறன்களை கற்றுக்கொண்டே இருப்பது மிகவும் அவசியம் ஆகும். அப்போதுதான், நமது மூளையின் செயல்பாடும் அதிகரிக்கும்.
உறவுகள்: மனிதர்கள், சமூக மிருகங்கள். உறவுகள் இல்லை என்றால் நிம்மதியாக இருக்கும் என்று தோன்றினாலும், அந்த நிலை வரும் போது தனிமை உணர்வும் நம்மை வாட்டலாம். எனவே, வாழ்வு சற்று கடினமாகும் போது நாம் அதை இன்னொருவருடன் பகிர்ந்து கொள்வதற்காவது நல்ல உறவுகளை சம்பாதிக்க வேண்டும். அது காதல் உறவாக மட்டுமே இருக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை.
தொழில்: உங்களுக்கு எந்த தொழிலில் விருப்பமோ, எது உங்களை தினமும் எது மகிழ்ச்சிக்குள்ளாக்குகிறதோ அந்த தொழிலை நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். அதில் எப்படி முன்னேறலாம் என்பதற்கான திட்டமிடலும் உங்களிடம் இருக்க வேண்டும்.
ஆரோக்கியம் முக்கியம்: பணம் நஷ்டமானால் மீண்டும் சம்பாதித்து கொள்ளலாம், ஆனால் உடல்நிலையை பாதுகாப்பாக பார்த்துக்கொள்ளாவிட்டால் பின்னால் பல பிரச்சனைகள் வரும். எனவே, உங்களது உடலை பத்திரமாக பார்த்துக்கொள்ள வேண்டியது உங்களின் கடமையாகும்.
நிதி குறித்த விழிப்புணர்வு: உங்கள் வருமானத்தை கணக்கிட்டு, அதை எதில் முதலீடு செய்யலாம், எதில் இருந்து லாபம் பார்க்க முடியும் என்பதை திட்டமிட வேண்டும்.
பயணம்: பள்ளி நமக்கு கற்றுக்கொடுக்காத பாடங்களை கூட, பயணங்கள் கற்றுக்கொடுக்கும் என பிறர் கூற கேட்டிருப்போம். உலகை இன்னும் விரிவாக பார்க்கவும் பயணங்கள் உதவும். எனவே, 32 வயதிற்கு முன்பு நன்றாக பயணம் செய்ய கற்றுக்கொள்ளுங்கள்.
பிடித்த விஷயங்களை செய்ய வேண்டும்: நீங்கள் உங்களுக்கு பிடித்த விஷயங்களை செய்யும் போது, பலர் “இதை செய்யாதே அதை செய்யாதே” என்று கூறுவர். ஆனால், நமக்கு எது பிடிக்கும்-பிடிக்காது என்பது நமக்குதான் தெரியும். எனவே, எந்த காரணத்திற்காகவும் உங்களுக்கு பிடித்த விஷயங்களை செய்வதில் இருந்து தவறி விடாதீர்கள்.