கொலஸ்டிரால், நீரிழிவை ஓட விரட்டும் ‘மேஜிக்’ டிரிங்க்ஸ்!

உடலில் 70 சதவீதம் தண்ணீர். இதில் பற்றாக்குறை ஏற்பட்டால் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படும். சில வகையான பொருட்களைச் சேர்த்தால் தயாரிக்கும் அற்புதமான பானங்களால், கொலஸ்டிரால், சர்க்கரை நோய் போன்ற நோய்கள் மட்டுமின்றி, பல வித உடல் பிரச்சனைகளை தீரும்.

1 /5

கிராம்பு நீர் ஆரோக்கியத்திற்கும் மிகவும் நன்மை பயக்கும். கிராம்பில் நுண்ணுயிர் எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் உள்ளன. தினமும் காலையில் கிராம்பு தட்டி போட்டு கொதிக்க வைத்த நீரை குடித்து வந்தால் சிறந்த பலன் கிடைக்கும்.

2 /5

இஞ்சி ஒரு அற்புதமான மருந்து. இது அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. இஞ்சி டிரிங்க் உடல் வலி மற்றும் வீக்கத்தைக் குறைக்கிறது. தினமும் காலையில் இஞ்சி போட்டி கொதிக்க வைத்த தண்ணீர் குடிப்பதால் அற்புதமான நன்மைகள் கிடைக்கும்.

3 /5

வெந்தயம் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். நீரிழிவு நோயாளிகளுக்கு நன்றாக வேலை செய்கிறது. இதில் கரையக்கூடிய நார்ச்சத்து உள்ளது. இரத்த சர்க்கரை அளவு குறையும். வெந்தயம் ஊற வைத்த தண்ணீரை குடிப்பது சிறந்த பலனைக் கொடுஇக்கும்

4 /5

மற்றொரு அற்புதமான மசாலா பொருள் ஓமம். தொடர்ந்து ஓமம் தண்ணீர் குடித்து வந்தால், அதிக எடை பிரச்சனையில் இருந்து நிவாரணம் பெறலாம்.

5 /5

சோம்பு தண்ணீர் தோல் பராமரிப்புக்கு அற்புதமானது. இதில் செலினியம், கால்சியம், துத்தநாகம் மற்றும் வைட்டமின் சி நிறைந்துள்ளது. சோம்பு தண்ணீரை உட்கொள்வதால் இரத்தத்தில் உள்ள ஆக்ஸிஜன் சமநிலையில் இருக்கும்.