Cashew: நோயற்ற வாழ்வு வேண்டுமா? முந்திரியின் தீமைகள் தெரிந்தால் சாப்பிடவே மாட்டீர்கள்!

Bad Side Of Cashew: முந்திரி மிகவும் சத்தானது என்று சொல்லப்பட்டாலும், அதில் பக்க விளைவுகள் பிற பருப்புகளை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. ஒவ்வாமை மற்றும் இரைப்பை குடல் பிரச்சனைகளை ஏற்படுத்தும் முந்திரி பருப்பு மட்டுமல்ல, முந்திரிப் பழமும் ஒவ்வாமையை ஏற்படுத்தக்கூடியது.  

தோல் அரிப்பு மற்றும் ஆஸ்துமா போன்ற லேசான தோல் எதிர்வினைகள் முதல் அனாபிலாக்ஸிஸ் போன்ற தீவிரமான பிரச்சனைகள் வரை பல்வேறு அறிகுறிகளை முந்திரி ஒவ்வாமை ஏற்படுத்தலாம்.

 

1 /7

முந்திரியில் அதிக கொழுப்பு மற்றும் கலோரிகள் உள்ளன, அதிக அளவில் சாப்பிட்டால் வாயு மற்றும் வீக்கம் போன்ற இரைப்பை குடல் பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

2 /7

ஒரு நாளைக்கு எத்தனை முந்திரி சாப்பிடலாம்? முந்திரியின் சத்தான மற்றும் க்ரீம் சுவையானது நம்மை சாப்பிடத் தூண்டும். பேசிக்கொண்டே வெறும் வாயில் முந்திரியை சாப்பிட்டுக் கொண்டே இருந்தால், எவ்வளவு உண்டோம் என்பதே தெரியாது. ஒரு நாளைக்கு 4 அல்லது 5 முந்திரிகள் போதுமானது

3 /7

முந்திரி சாப்பிடுவதால் என்ன ஆபத்து? ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருந்தாலும், முந்திரியை அளவோடு உட்கொள்வது நல்லது. அதிலும் குறிப்பாக கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் பெண்கள் மற்றும் நீரிழிவு நோயாளிகள் முந்திரி உண்பதைத் தவிர்க்க வேண்டும்.

4 /7

முந்திரியை அதிகமாக உட்கொள்வது இரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கச் செய்யும். எனவே, அறுவை சிகிச்சை மேற்கொள்பவர்கள், அதற்கு குறைந்தபட்சம் இரண்டு வாரங்களுக்கு முன்பு முந்திரியை தவிர்க்க வேண்டும். பச்சை முந்திரியில் உருஷியோல் என்ற நச்சுப் பொருள் உள்ளது. முந்திரியை அவற்றின் ஓடுகளை அகற்றி வறுத்த பிறகு சாப்பிட அறிவுறுத்தப்படுகிறது. 

5 /7

ஏற்கனவே முந்திரியில் கலோரிகள் அதிகமாக இருக்கும் நிலையில் சோடியம் உட்கொள்வதைத் தடுக்க வறுத்த அல்லது உப்பு சேர்த்த முந்திரியைத் தவிர்க்கவும்.

6 /7

ஏற்கனவே முந்திரியில் கலோரிகள் அதிகமாக இருக்கும் நிலையில், அதனுடன் நெய் மற்றும் சர்க்கரை போன்ற கலோரி அதிகமான பொருட்களை சேர்த்து செய்யப்படும் இனிப்புகள் உடலுக்கு நல்லதல்ல

7 /7

நீரிழிவு எதிர்ப்பு மருந்துகளை எடுத்துக் கொண்டால், முந்திரியை தவிர்ப்பது அவசியம். இன்சுலின் உள்ளிட்ட மருந்துகளின் விளைவைக் குறைக்கும் முந்திரி, இரத்தச் சர்க்கரைக் கட்டுப்பாட்டில் சிக்கல்களை ஏற்படுத்தும்.