மூளையை தாக்கும் நாடா புழுக்கள்; இந்த 5 காய்கறிகள் மூலம் உடலில் செல்ல வாய்ப்பு

நாடாப்புழுக்கள் குடல் மற்றும் மூளையைத் தாக்குகின்றன. குடல் மீதான தாக்குதலை விட, மூளையை தாக்கினால், அதனால் ஏற்படும் பாதிப்புகள் மிக மிக அதிகம். நமது குடல் மற்றும் மூளையை அடைந்த பிறகு, இந்த புழுக்கள் அங்கு முட்டைகளை இடுகின்றன,  இது மூளை, தசைகள் அல்லது பிற திசுக்களில் பாதிப்பை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல், உடலில் கடுமையான பிரச்சனைகளையும் ஏற்படுத்துகிறது. இந்த பூச்சிகள் நீங்கள் உண்ணும் காய்கறிகளில், குறிப்பாக சிறிய விதைகள் கொண்ட காய்கறிகளில் காணப்படுகின்றன. இந்த புழுக்கள் அந்த காய்கறி விதைகளில் வாழ்கின்றன. அதனால்தான் சில காய்கறிகளை சாப்பிடும்போது கவனமாக இருக்க வேண்டும்.

1 /5

முட்டைக்கோஸில் உள்ள நாடாப்புழு  பல முறை கழுவிய பிறகும் அகலுவதில்லை. அதனை வெட்டும் போது, அதனை அப்படியே வெட்டாமல், அதனை பிரித்து, வெதுவெதுப்பான மஞ்சம் தண்ணீரில் கழுவிய பின் உண்ணுவது நல்லது.   

2 /5

குடை மிளகாய் எல்லா பருவத்திலும் கிடைக்கும். ஆனால் அவற்றின் விதைகளில் நாடாப்புழு முட்டைகள் இருக்கலாம். இந்த பூச்சிகள் மிகவும் சிறியவை. சாதாரணமாக பார்க்கும் கண்ணுக்குத் தெரியாது. நமது கவனக்குறைவால், இந்தப் பூச்சிகள் மூளைக்குச் செல்லும். எனவே அதன் அனைத்து விதைகளையும் அகற்ற வேண்டும். பின்னர் அதை வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.  

3 /5

கத்தரிக்காய் விதைகளில் நாடாப்புழுக்கள் அதிகமாக இருக்கும். ஒவ்வொரு முறையும் கத்தரிக்காயை நறுக்கும் போது கவனமாக வெட்டி வெந்நீரில் 2 நிமிடம் போட்டு வைத்து, பிறகு சமைக்கவும்.

4 /5

கோவைக்காயிலும் நாடாபுழுக்கள் இருக்கும். எனவே அதை வெட்டும் போது கவனமாக இருக்கவும்.

5 /5

சேப்பங்கிழங்கு இலைகளில் நாடாப்புழுக்கள் மற்றும் அவற்றின் முட்டைகள் இருக்கலாம். மழை மற்றும் ஈரப்பதமான காலநிலையில், இந்த இலைகள் அவற்றின் இனப்பெருக்க மையமாக மாறும். இந்த இலைகளை உணவில் சேர்ப்பதற்கு முன், அவற்றை வெந்நீரில் நன்கு கழுவி, ஒவ்வொரு இலையையும் தனித்தனியாக வெட்டவும்.