Hair growth tips: முடி அடர்த்தியாக வளர என்ன சாப்பிட வேண்டும்

முடி உதிர்தல் என்பது நாம் சந்திக்கும் பொதுவான பிரச்சனைகளில் ஒன்றாகும்.வலுவான மற்றும் ஆரோக்கியமான கூந்தலுக்கு புரதம் நிறைந்த உணவு தேவைப்படுகிறது. பொதுவாக உடலில் புரதத்தின் பற்றாக்குறை அதிக முடி உதிர்தலுக்கு வழிவகுக்கும். உறுதியான கூந்தலுக்கு வைட்டமின் ஏ, சி, இ, பி5, பி6, பி12, இரும்புச்சத்து, துத்தநாகம், புரதம், கொழுப்பு அமிலங்கள் மிக அவசியம். இவை முடி உதிர்வை தவிர்க்கவும் நம் கூந்தலை ஆரோக்கியமாகவும் மாற்றக்கூடியவை. எனவே எந்தெந்த உணவுகளை எடுத்துக்கொண்டால் முடி உதிர்வைத் தவிர்க்கலாம் என்பதைப் பார்க்கலாம். 

 

1 /5

முட்டையில் வைட்டமின் பி 8 அல்லது பயோட்டின் உள்ளது. இது முடி வளர்ச்சிக்கு உதவுகிறது முடி உதிர்வதையும் தடுக்கிறது. முட்டையில் உள்ள வெள்ளைப் பகுதியில் ‘அல்புமின்’ என்ற புரதம் உள்ளது. அது கூந்தல் வளர்ச்சியைத் தூண்டுகிறது. இதில் முடி உதிர்வைக் கட்டுபடுத்தும் பயோட்டின் என்கிற வைட்டமினும் உள்ளது.

2 /5

தலைமுடி ஆரோக்கியமாக வளர ஒமேகா 3 மிகவும் சிறந்தது. இந்த சத்துக்கள் மீன், வால்நட்ஸ், ஆளி விதை, பாதாம் போன்றவற்றில் அதிகளவு நிறைந்துள்ளது. இவற்றில் ஏதேனும் ஒன்றை தினமும் உட்கொள்வதினால் முடி வளர்ச்சியை அதிகரிக்கலாம்.

3 /5

மாம்பழத்தில் உள்ள வைட்டமின் ஏ, முடி வறட்சியைத் தடுக்க உதவுகிறது. கூடுதலாக, மாம்பழத்தில் வைட்டமின் சி, ஈ, கால்சியம் மற்றும் ஃபோலேட் ஆகியவை உள்ளன, அவை முடி வளர்ச்சியைத் துரிதப்படுத்துகின்றன.

4 /5

கீரையில் இரும்பு, வைட்டமின் ஏ, வைட்டமின் சி, மாங்கனீசு, துத்தநாகம், ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் முடி வளர உதவும் ஃபோலேட் சத்துகள் உண்டு.

5 /5

தர்பூசணி என்பது நீர் சத்து அதிகம் இருக்கும் ஒரு பழமாகும். தர்பூசணியில் வைட்டமின் சி இன் சிறந்த ஆதாரமாகும். எனவே இது முடியை உள்ளிருந்து ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.