தலைக்கு குளிப்பதற்கு முன்பு முடிக்கு எண்ணெய் வைப்பது நல்லதா?

ஷாம்பு பயன்படுத்தும் முன்பு தலைமுடிக்கு எண்ணெய் தடவுகிறீர்களா? அப்படி என்றால் பின்பற்ற வேண்டியவை மற்றும் பின்பற்ற கூடாதவை என சில விஷயங்கள் உள்ளன.

 

1 /6

குளிர்காலத்தில் தலைமுடி வறண்டு, கரடுமுரடாக இருக்கும். இந்த நேரத்தில் பலரும் தலைமுடியை ஸ்டைலிங் செய்கிறார்கள். ஆனால் இதன் காரணமாக முடி தொடர்பான பிரச்சனைகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது.   

2 /6

குளிர்காலத்தில் தலைமுடி வறண்டு போகாமல் இருக்க, முடிக்கு ஷாம்பூ பயன்படுத்தும் முன்பு எண்ணெய் தடவுவது நல்லது என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். இதை அடிக்கடி செய்வதன் மூலம், குளிர்காலம் முழுவதும் உங்கள் தலைமுடியை ஆரோக்கியமாக வைத்திருக்கலாம்.  

3 /6

குளிப்பதற்கு அரை மணி நேரம் முன்பு தலைமுடியில் எண்ணெய் வைப்பது நல்லது. இதனால் முடியில் நன்கு ஊறி தலைமுடியை ஆரோக்கியமாகவும் பளபளப்பாகவும் மாற்றும்.  

4 /6

சுத்தமான தலையில் எண்ணெய் வைப்பது உங்கள் உச்சந்தலைக்கு நல்லது. அதிக அழுக்கு நிறைந்த தலையில் எண்ணெய் வைப்பது பொடுகுத் தொல்லை ஏற்படுத்தும். இதனால் அரிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.  

5 /6

உங்கள் தலைமுடிக்கு என்ன தேவை என்பதை அறிந்து அதற்கு சரியான எண்ணெயைத் தேர்ந்தெடுப்பது முக்கியம். கற்றாழை, ஆலிவ் எண்ணெய் உங்கள் தலைமுடியை காயப்படுத்தாமல் பாதுகாக்க உதவும்.  

6 /6

மாதம் இரண்டு முறை தலைக்கு ஹேர் ஆயில் மசாஜ் செய்தால் முடியின் வேர்களுக்கு இரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவுகிறது. இது உங்கள் தலைமுடியை வலுவாகவும் ஆரோக்கியமாகவும் மாற்ற உதவுகிறது.