அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு! இது பழமொழி மட்டுமல்ல, எந்நாளும், எல்லா விஷயத்திற்கும் பொருந்தும் ஆரோக்கிய மொழி. இந்த பழமொழிக்கு பொருந்தும் நமது தினசரி பழக்கவழக்கங்கள்.
தேவைக்கு அதிகமாக தூங்குவதும், உடலின் ஆரோக்கியத்தை நேரடியாக பாதிக்கும். அளவான உறக்கம், சத்தான அளவான உணவு இரண்டுமே ஆரோக்கியமான வாழ்வுக்கு அடிப்படை ஆகும்
ஜங்க் ஃபுட்... இதன் பெயரே இந்த உணவின் தன்மையை கூறிவிடுகிறது. ஜங்க் ஃபுட் சாப்பிட்டு வயிற்றை குப்பைத்தொட்டியாக்க வேண்டாம்
குளுகுளு கூழாக இருந்தாலும், இதில் உள்ள இனிப்பும், குளுமையும் நேரடியாக உடல் ஆரோக்கியத்தில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியவை
அதிக அளவில் சாக்லேட் உண்பது பற்களுக்கு மட்டுமல்ல, ஆரோக்கியத்திற்கே கேடு விளைவிக்குக்ம்
பிரிட்ஜில் வைக்கப்பட்ட உணவுகளை, நேரடியாக உண்பது உடல்நலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும்