வங்கிகள் கொடுக்கும் அதிகபட்ட வட்டி! இது நிலையான வைப்பு எஃப்.டி விகிதங்கள்!

FD Interest Rates: உத்திரவாதத்துடன் முதலீடு என்றால் அனைவரின் நினைவுக்கும் முதலில் வருவது நிலையான வைப்புத்தொகை தான். பணம் பாதுகாப்பாக இருப்பதுடன், உத்தரவாதமான வருமானமும் கிடைக்கும். 

FD க்கு 9.1% வரை வட்டிகொடுக்கும் வங்கிகள் இந்த மாதம் விகிதங்களை மாற்றியுள்ளன, சமீபத்திய விகிதங்கள் என்ன என்பதை அறிந்து கொள்ளுங்கள்

1 /9

பாரத ஸ்டேட் வங்கி (SBI), DCB வங்கி, IDFC FIRST வங்கி, சிட்டி யூனியன் வங்கி, RBL வங்கி மற்றும் மூலதன சிறு நிதி வங்கி ஆகியவை அடங்கும். இந்த வங்கிகள் FD வட்டி விகிதங்களை எவ்வளவு உயர்த்தியுள்ளன என்பதை தெரிந்துக் கொள்வோம்.

2 /9

மே மாததில், பல வங்கிகள் FD வட்டி விகிதங்களை அதிகரித்துள்ளன. அவற்றில் ஆறு வங்கிகளின் வட்டி விகிதங்களை தெரிந்துக் கொள்வோம்

3 /9

DCB வங்கியில் 8.05 சதவீத வட்டி கிடைக்கிறது. மூத்த குடிமக்களுக்கு 8.55 சதவீதம் வட்டி வழங்கப்படும்.19 மாதங்கள் முதல் 20 மாதங்கள் வரையிலான FD களுக்கு இது பொருந்தும். 2 கோடி வரையிலான எஃப்டிக்கு இந்த வட்டி வழங்கப்படுகிறது. மே 22, 2024 முதல் வங்கி அதன் விகிதங்களைத் திருத்தியுள்ளது.

4 /9

மே 15 முதல் ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் பேங்க் 2 கோடி ரூபாய் வரையிலான FDக்கு 3% முதல் 8% வரை வட்டி வழங்குகிறது. இந்த வட்டி 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான FD க்கு வழங்கப்படுகிறது. மூத்த குடிமக்களுக்கு 0.50 சதவீதம் கூடுதல் வட்டி வழங்கப்படுகிறது. வங்கியால் வழங்கப்படும் அதிகபட்ச வட்டி விகிதம் 500 நாட்கள் வரையிலான காலத்திற்கு 8 சதவீதம் ஆகும்.

5 /9

ரூ.2 கோடி வரையிலான எஃப்டிகளுக்கான வட்டி விகிதங்களைத் திருத்தியுள்ளது. மே 15 அன்று வட்டி விகிதங்களை மாற்றிய ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, 75 bps வரை மாற்றியுள்ளது. 2 முதல் 3 வருட காலத்திற்கு FDக்கு 7 சதவீதம் வரை வட்டி வழங்கப்படுகிறது. மூத்த குடிமக்களுக்கு 7.5 சதவீதம் வரை வட்டி கொடுக்கப்படுகிறது

6 /9

RBL வங்கியும் அதன் FD விகிதங்களை திருத்தியுள்ளது. இந்த வட்டி விகிதங்கள் ரூ.2 கோடி வரையிலான எஃப்டிகளுக்கும் பொருந்தும். RBL வங்கியால் வழங்கப்படும் அதிகபட்ச வட்டி 8 சதவீதம் ஆகும், 18-24 மாத எஃப்டிகளுக்கு இந்த வட்டி வழங்கப்படுகிறது.

7 /9

கேபிடல் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி FD மீதான வட்டி விகிதங்களைத் திருத்தியுள்ளது. 2 கோடி வரையிலான FDக்கு இது பொருந்தும். 3.5 சதவீதம் முதல் 7.55 சதவீதம் வரை வட்டி வழங்கப்படுகிறது. 400 நாட்களுக்கான FDக்கு அதிக வட்டி விகிதம் வழங்கப்படுகிறது.

8 /9

சிட்டி யூனியன் வங்கி, FD வட்டி விகிதங்களை திருத்தியுள்ளது. 2 கோடி ரூபாய் வரையிலான FDகளுக்கு 5 சதவீதம் முதல் 7.25 சதவீதம் வரை வட்டி அளிக்கிறது. 400 நாட்கள் எஃப்டிக்கு அதிகபட்சமாக 7.25 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது.

9 /9

பொறுப்புத் துறப்பு:  இந்த கட்டுரை இணையத்தில் பெறப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.