Serial TRP : அதிக ரேட்டிங் பெற்ற டாப் 5 தமிழ் தொடர்கள்! முதல் இடத்தில் இருக்கும் சீரியல் எது தெரியுமா?

Serial TRP Rating : தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள், அந்த வாரத்தில் எவ்வளவு பார்வையாளர்கள் பார்த்திருக்கிறார்கள் என்பதை வைத்து டிஆர்பி ரேட்டிங் நிர்ணயிக்கப்படும். அப்படி, இந்த வாரத்தில் டாப்பில் இருக்கும் சீரியல்களின் பட்டியலை இங்கு பார்ப்போம். 

Serial TRP Rating : சினிமா உலகிற்கு எப்படி ஒரு தரப்பு ரசிகர்கள் இருக்கின்றனரோ, அதே போல சின்னத்திரைக்கென்று பல ஆயிரம் ரசிகர்கள் தமிழ் நாட்டில் உள்ளனர். மாமியார்-மருமகள் சண்டை, குடும்ப பிரச்சனைகள் ஆகியவற்றை மட்டும் கதைக்களமாக அமைக்கப்பட்டு வந்த சீரியல்கள், இப்போது கொஞ்சம் வித்தியாசமான கதைகளை கொண்டிருக்கின்றன. பெண்களின் உரிமை பேசும் சீரியல்களுக்கும், காதல் சீரியல்களுக்கும் இப்போது மவுசு அதிகரித்திருக்கிறது. கடந்த வாரத்தில் எந்தெந்த சீரியல்கள் அதிக டிஆர்பி ரேட்டிங்கை பெற்றுள்ளன என்பதை காண்போமா? 

1 /8

சமீபத்தில் வந்த தொடர்கள் பல, மக்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. முதல் 5 டாப் தொடர்களை பார்ப்பதற்கு முன்பு, 6 மற்றும் 7வது இடங்களில் இடம் பெற்றிருக்கும் தொடர்களின் லிஸ்ட் குறித்து இங்கு பார்ப்போம். 

2 /8

கலகலப்பான குடும்ப தொடர் ஆஹா கல்யாணம். இந்த தொடர் கடந்த வாரத்தில் 5.8 டிஆர்பி ரேட்டிங்கை பெற்றிருக்கிறது.

3 /8

வலிமையான பெண்ணின் கதையை காண்பிக்கும் தொடர் சிங்கப்பெண்ணே. இந்த தொடர் கடந்த வாரத்தில் 6.2 ரேட்டிங்கை பெற்றிருக்கிறது. 

4 /8

தனி ஆளாக குடும்பத்தை தாங்கி நிற்கும் பெண்ணின் கதை குறித்து பேசும் தொடர், கயல். இந்த தொடர் டாப் 5 சீரியல்களின் லிஸ்டில் 6.3 டிஆர்பி ரேட்டிங் பெற்று 5வது இடத்தில் இருக்கிறது. 

5 /8

காதல்-குடும்ப கதையாக ஒளிபரப்பாகி வருகிறது, சின்ன மருமகள். இந்த தொடர், 6.8 டிஆர்பி ரேட்டிங்கை பெற்று டாப் 5 சீரியல்களின் லிஸ்டில் 4வது இடத்தை பெற்றிருக்கிறது. 

6 /8

வெற்றிகரமாக ஓடி முடிந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் இரண்டாவது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இந்த தொடர், கடந்த வாரத்தில் 7.2 டிஆர்பி ரேட்டிங்கை பெற்றிருக்கிறது. இது டாப் 5 சீரியல்களின் லிஸ்டில் 3வது இடத்தில் இருக்கிறது. 

7 /8

ஒன்றும் அறியாத அப்பாவி பெண், கணவராலும் சமூகத்தாலும் ஏமாற்றப்பட்டு பின்பு தனது வாழ்க்கையை வெற்றிகரமாக வாழ்ந்து காட்டும் கதையை கொண்ட சீரியல்தான், பாக்கியலக்‌ஷ்மி. இந்த தொடர், கடந்த வாரத்தில் 8.7 ரேட்டிங்கை பெற்று, டாப் 5 சீரியல்களின் லிஸ்டில் 2வது இடத்தில் இருக்கிறது. 

8 /8

முரட்டு ஆணுக்கும் மென்மையான பெண்ணிற்கும் காதல் வந்தால் எப்படியிருக்கும்? இதை கதைக்களமாக கொண்டு ஒளிபரப்பாகும் சீரியல், சிறகடிக்க ஆசை. இந்த தொடர், டிஆர்பி ரேட்டிங்கில் டாப்பில் வந்திருக்கிறது. மொத்தம், 9.5 ரேட்டிங்கை இத்தொடர் பெற்றிருக்கிறது.