Guru Vakra Peyarchi, Impact on Zodiac Signs: ஜோதிட சாஸ்திரத்தின்படி, ஒவ்வொரு கிரகமும் குறிப்பிட்ட நேரத்தில் தனது ராசியை மாற்றுகிறது. ஒன்பது கிரகங்களில் குரு பகவான் நல்ல பலன்களை அளிக்கும் சுப கிரகமாக கருதப்படுகிறார்.
செப்டம்பர் 4 ஆம் தேதி, குரு பகவான் மேஷ ராசியில் வக்ர பெயர்ச்சி அடைந்தார். குரு பகவான் டிசம்பர் 31 வரை வக்ர நிலையில் இருந்து அதன் பிறகு வக்ர நிவர்த்தி அடைவார். குருவின் வக்ர பெயர்ச்சியால் எந்த ராசிகளுக்கு ஆதாயம்? யாருக்கு ஆபத்து? இந்த பதிவில் 12 ராசிகளுக்கான ராசிபலனை பற்றி தெரிந்துகொள்ளலாம்.
குரு வக்ர பெயர்ச்சி: குரு பகவான் மகிழ்ச்சி, செல்வம், பெருமை மற்றும் செழுமையின் கிரகமாக கருதப்படுகிறார். செப்டம்பர் 4 ஆம் தேதி அவர் மேஷ ராசியில் வியாழன் வக்ர பெயர்ச்சி அடைந்தார். குரு வக்ர பெயர்ச்சியில் 12 ராசிகளிலும் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதை இந்த பதிவில் காணலாம்.
மேஷம்: மேஷ ராசிக்காரர்கள் அனைத்து திட்டங்களிலும் வெற்றி பெறுவார்கள். வருமானம் உயர வாய்ப்பு உள்ளது. பேச்சில் இனிமை இருக்கும். குடும்ப உறுப்பினர்களின் உடல் நலனில் அக்கறை தேவை. செலவு அதிகரிக்கும். வேலை மாற்றம் அல்லது தொழில் மாற்றம் ஏற்படலாம்.
ரிஷபம்: இந்த காலம் தனிப்பட்ட வளர்ச்சிக்கு ஏற்றது. ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். நீங்கள் புதிய பயணங்களை மேற்கொள்வீர்கள். இந்த பயணங்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். இது உங்கள் வாழ்க்கையில் நல்ல மாற்றங்களைக் கொண்டுவரும்.
மிதுனம்: இந்த காலம் தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். நிதி நிலை உயரும். புதிய நபர்களை சந்திப்பீர்கள். இதன் மூலம் நல்ல தொடர்புகள் கிடைக்கும். நம்பிக்கை நிறைந்திருக்கும். ஆனால் மனதில் கலக்கமும் இருக்கும். அமைதியாய் இருந்து பொறுமையைக் கடைப்பிடிக்க முயற்சி செய்யுங்கள்.
கடகம்: கடினமாக உழைத்து சவால்களை எதிர்கொள்ள வேண்டும். இருப்பினும் உங்களின் கடின உழைப்பு நிச்சயம் பலன் தரும். உங்கள் பணி மூலம் நீங்கள் அறியப்படுவீர்கள். மேலும் உங்கள் வேலையை மக்கள் பாராட்டுவார்கள். கல்வி மற்றும் ஆராய்ச்சி பணிகளில் மதிப்பும் மரியாதையும் இருக்கும். வியாபாரத்தில் ஏற்படும் மாற்றங்கள் சாதகமாக இருக்கும்.
சிம்மம்: இந்த ராசிக்காரர்களின் வாழ்க்கையில் நல்ல செல்வாக்கு இருக்கும். புதிய இடங்களை அனுபவிக்க முடியும். மாணவர்கள் படிப்பில் ஆர்வம் காட்ட வேண்டும். கடின உழைப்பால் உங்கள் இலக்குகளை அடையலாம். தாயின் உடல்நிலையில் அக்கறை காட்டுங்கள். நண்பர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும். நண்பரின் உதவியால் சொத்துகளிலிருந்து வருமானம் வரும்.
கன்னி: இந்த ராசிக்காரர்கள் தங்கள் பணித் துறையைப் பற்றி சிந்திக்க வேண்டும். உங்கள் புதிய முயற்சியில் நீங்கள் வேலை செய்யலாம். பொறுமை குறையும். அமைதியாய் இருங்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளின் ஒத்துழைப்பு இருக்கும். முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் கிடைக்கும். இட மாற்றம் கூட ஏற்படலாம்.
துலாம்: இந்த ராசிக்காரர்கள் வியாபாரத்தில் லாபம் அடைவார்கள். புதிய நபர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும். இது முதலீட்டுக்கு நல்ல நேரமாக இருக்கும். குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களின் முழுமையான ஆதரவு கிடைக்கும்.
விருச்சிகம்: இந்த ராசிக்காரர்கள் உத்தியோகத்தில் பதவி உயர்வையும், பணித்துறையில் உயர்வையும் எதிர்பார்க்கலாம். ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்துங்கள். சட்டப் பணிகள் தாமதமாகலாம், ஆனால் முடிவு உங்களுக்கு சாதகமாக இருக்கும்.
தனுசு: இந்த ராசிக்காரர்கள் தங்கள் உறவினர்கள் அல்லது அன்புக்குரியவர்களை சந்திக்கலாம். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையின் அடிப்படையில் இந்த காலம் மிகவும் சாதகமானது. பெற்றோரின் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் சமய நிகழ்வுகள் நடைபெறும். அதிக ஓட்டம் இருக்கும். வாழ்க்கை நல்ல நிலைக்கு முன்னேறும்.
மகரம்: இந்த ராசிக்காரர்கள் சொத்து, வாகனங்களில் முதலீடு செய்து லாபம் அடைவார்கள். குடும்பத்தில் உள்ள மன அழுத்த சூழ்நிலையை மேம்படுத்த இதுவே சரியான நேரம். பெற்றோரின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். குடும்ப உறுப்பினர்களுடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.
கும்பம்: உங்கள் அன்றாட வாழ்க்கையிலிருந்து சற்று விலகி புதிய பயணத்தை அனுபவியுங்கள். வேலை மாற்றம் ஏற்பட வாய்ப்பு உண்டு. கோபத்தைத் தவிர்க்கவும். உத்தியோகத்தில் அதிகாரிகளின் ஒத்துழைப்பு இருக்கும். ஆனால் சில கூடுதல் பொறுப்பைக் காணலாம்.
மீனம்: குடும்ப உறுப்பினர்களுடன் உணர்வுபூர்வமான உறவுகள் வலுவடையும், நிதி நிலையும் மேம்படும். முதலீடு செய்வதற்கு இது நல்ல நேரமாக இருக்கும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். வியாபாரம் மேம்படும். நண்பர்களின் ஆதரவு கிடைக்கும்.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.