Mars Transit 2022: ஜோதிட சாஸ்திரத்தில், ஒவ்வொரு கிரகத்தின் ராசி மாறும் நேரமும் குறிப்பிடப்பட்டுள்ளது. செவ்வாய் கிரகமும் இவற்றில் ஒன்றாகும். மேலும் செவ்வாயின் ராசி மாற்றம் வாழ்க்கையின் பல முக்கிய அம்சங்களை பாதிக்கிறது. இன்று, ஆகஸ்ட் 10, 2022 அன்று, செவ்வாய் கிரகம் ரிஷப ராசிக்குள் நுழைகிறது. செவ்வாய் 2022 அக்டோபர் 14 வரை இந்த ராசியில் இருக்கும். செவ்வாயின் ராசி மாற்றத்தால் அனைத்து ராசிகளிலும் மாற்றங்கள் காணப்படும். எனினும், 4 ராசிக்காரர்களுக்கு பல அனுகூலமான பலன்கள் கிடைக்கும். இன்று வரை செவ்வாய் மேஷ ராசியில் ராகுவுடன் இணைந்து பலரது வாழ்வில் பிரச்சனைகளை ஏற்படுத்தி வந்தது. எனினும், இப்போது சுக்கிரனுக்குச் சொந்தமான ரிஷப ராசியில் நுழைந்து சுப பலன்களைத் தரத் தொடங்கும். இந்த செவ்வாய் சஞ்சாரம் எந்த ராசிக்காரர்களின் வாழ்வில் மகிழ்ச்சியையும் செழிப்பையும் பொழியப்போகிறது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
செவ்வாய் ரிஷப ராசிக்குள் நுழைவதால் ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த செவ்வாய் பெயர்ச்சி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த நேரத்தில் ரிஷப ராசிக்கார்ரகள் பெரிய பிரச்சனைகளிலிருந்து விடுபடுவார்கள். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும். தேர்வு-நேர்காணலில் வெற்றி பெறலாம். தொழிலில் நல்ல காலம் தொடங்கும்.
செவ்வாயின் ராசி மாற்றம் கடக ராசிக்காரர்களுக்கு பண பலன்களைத் தரும். வேலை தேடுபவர்களுக்கு புதிய, நல்ல வேலை கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு ஊதிய உயர்வு கிடைக்கும். நீங்கள் கடன் தொல்லையில் இருந்தால், இந்த நேரத்தில் உங்களுக்கு அதிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.
செவ்வாய்ப் பெயர்ச்சி சிம்ம ராசிக்காரர்களுக்கு நன்மையான பலன்களைத் தரும். பல தரப்புகளிலிருந்து பணம் ஈட்ட பல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். பொருளாதார நிலை வலுவாக இருக்கும். நீங்கள் முதலீடு செய்ய விரும்பினால், அதை இப்போது செய்யலாம். இந்த காலத்தில் செய்யப்படும் முதலீடுகள் நல்ல லாபத்தை ஈட்டித் தரும். வீட்டில் மகிழ்ச்சி நிலவும். தொழில்-வியாபாரமும் நன்றாக இருக்கும்.
தனுசு ராசிக்காரர்களுக்கு செவ்வாய் பெயர்ச்சி நல்ல பலன்களைத் தரும். அவர்களின் வாழ்க்கையில் பிரச்சனைகள் முடிந்து மகிழ்ச்சி பிறக்கும். வாழ்க்கை சிறப்பாக இருக்கும். வருமானம் அதிகரிக்கும். தனுசு ராசிக்காரர்கள் கையில் எடுக்கும் அனைத்து காரியங்களிலும் வெற்றி கிடைக்கும். இது ஒரு பொன்னான நேரம் என்பதை உங்களுக்கு நடக்கும் நல்ல விஷயங்களால் அறிந்துகொள்வீர்கள். (பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிபடுத்தவில்லை)