மங்கலமான குத்துவிளக்கில் குடி கொண்டுள்ள முத்தேவர்கள்! யாருக்கு எந்த பாகம் உரியது?

Kuthuvilakkau : பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூன்று கடவுள்களும் குத்துவிளக்கில் இருப்பதாக நம்பப்படுகிறது. குத்துவிளக்கின் அடிப்பகுதியில் பிரம்மாவும், நடுவில் விஷ்ணுவும், மேல் பகுதியில் சிவனும் உள்ளதாக நம்பிக்கை

அதேபோல, குத்துவிளக்கை ஏற்றும்போது அதிலிருந்து வெளிப்படும் ஒளி லட்சுமி தேவி என்றும், வெளிச்சம் சரஸ்வதி தேவி என்றும், வெப்பம் பார்வதி தேவி என்பது இந்து மத நம்பிக்கை ஆகும்

1 /8

குத்து விளக்கின் ஐந்து முகங்களும், பஞ்சபூதங்களை குறிக்கின்றன. இயற்கை - பூமி, நீர், நெருப்பு, காற்று மற்றும் ஆகாயம் அல்லது விண்வெளி ஆகிய ஐந்து முக்கிய கூறுகளைக் குறிக்கும் விளக்கு குத்துவிளக்கு ஆகும்

2 /8

குத்துவிளக்கின் ஐந்து முகங்களை ஏற்றுவதால், ஆரோக்கியம், செல்வம், கல்வி, தைரியம் மற்றும் நீண்ட ஆயுள் என அனைத்தும் வாழ்வில் வந்து சேரும்

3 /8

வீட்டில் செழிப்பையும், அமைதியையும் தருவது குத்து விளக்கு பூஜை

4 /8

விளக்கு ஏற்றுவதை தொடர்ந்து செய்பவர்களின் வீட்டில் அனைத்து செழிப்பும் வந்து சேரும். சுபமான விஷயங்கள் நடைபெறும்  

5 /8

வெள்ளிக்கிழமையோ வீட்டில் செய்து, கடவுளை அழைத்து, மகாலட்சுமியின் அருள் பெறலாம்

6 /8

விளக்கு பூஜையை ராகுகாலத்திற்கு முன்போ அல்லது வெள்ளிக்கிழமையோ வீட்டில் செய்து மகாலட்சுமியின் அருள் பெறலாம்.

7 /8

தினசரி குத்துவிளக்கு ஏற்றி வீட்டில் வழிபடுவது அனைத்து நலன்களையும் கொண்டு வந்து சேர்க்கும்

8 /8

பொறுப்புத்துறப்பு: பாரம்பரிய நம்பிக்கைகள், தொன்றுதொட்டு தொடரும் நம்பிக்கைகள், பழக்கவழக்கங்களின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரையின் உள்ளடகத்திற்கு ஜீ மீடியா பொறுப்பேற்காது